ஏர்ஷிப்
ஹென்ரி ஜிஃப்பர் என்பவரால் 1852-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீராவியால் இயக்கப்பட்டது.
ஜெட் விமானம்
பிரான்ஸை சேர்ந்த மெர்கொன்னட் 1909-ஆம் ஆண்டும், மாக்ஸிம் கில்லாம் 1921-ஆம் ஆண்டும் ஜெட் விமானம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தினர். முதல் விமானம் 1939-ஆம் ஆண்டில் ஹெய்ன்கெல் ஹீ என்பவரால் கண்டறியப்பட்டது.
ஹெலிகாப்டர்
பிரான்ஸை சேர்ந்த ஒச்யிச் சென் 1924-இல் கண்டுபிடித்தார். 1930-இல் அதன் வடிவம் இத்தாலியில் டி அஸ்கானியோ என்பவரால் மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போதைய ஹெலிகாப்டரை வடிவமைத்தவர் ரஷியாவின் இகோர் சிகோர்ஸ்கை. இவர் வி.எஸ். 300 என்ற ஹெலிகாப்டரை 1940-இல் வடிவமைத்தார். ராணுவத்துக்காகப் பயன்படும் எக்ஸ்.ஆர். 4 எனும் ஹெலிகாப்டரையும் வடிவமைத்தார்.
ராக்கெட் என்ஜின்
அமெரிக்காவின் காட்டர்ட் என்பவரால் 1926-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
ராக்கெட்
ரஷியாவின் கான்ஸ்டான்டின் ட்ஸியோல்கவாஸ்கி, ஜெர்மனியின் வெர்னர் வான் பிரௌன் ஆகியோர் ராக்கெட்டை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர்கள். அமெரிக்காவின் ராபர்ட் ஹட்சிங் காட்டர்ட் 1923-இல் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டை முதன் முதலில் இயங்கினார்.
செலுலாய்ட்:
ஃபிலிம் தயாரிக்கப் பயன்படும் செலுலாய்ட்டை ஹியாட், இன்ஸ்யியன் ஆகியோரால் 1870-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக்
இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்கெஸ் என்பவரால், 1862-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
சிந்தெடிக் ஃபைபர்
பாலிமெர் எனப்படும் சிந்தெடிக் ஃபைபரை அமெரிக்காவின் தி டுபான்ட் நிறுவனத்தினரால் 1939-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஃப்ரிட்ஜ்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த கார்ல் லிண்டே என்பவரால், 1877-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
சிமென்ட்:
இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸப் ஆஸ்படின் 1824-இல் கண்டறிந்தார்.
கைக்கடிகாரம்
ஜெர்மனியின் பீட்டர் ஹென்லீன் 1504-இல் கண்டுபிடித்தார்.
மூக்குக் கண்ணாடி
இத்தாலியைச் சேர்ந்த சால்வினோ டி ஆர்மேட் என்பவர், 1284-இல் கண்டுபிடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.