மூதறிஞர் ராஜாஜி நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது, மேற்கு வங்கத்தில் உள்ள ஹெளராவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் பேசும்போது, ராஜாஜியை "மேன்மை தாங்கிய டாக்டர் சக்கரவர்த்தி ராஜாஜி அவர்களே!' என்றார்.
இதன்பின்னர் ராஜாஜி பேசும்போது, ""ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை நல்ல பிள்ளை என்று கூறுவாள். தாயைப் போல மற்றவர்கள் "நல்ல பிள்ளை' என்று கூற மாட்டார்கள். அதுபோல, ஒரு சில நல்ல பல்கலைக்கழகங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் உரிமையுண்டு. எனினும், "கௌரவ டாக்டர்' பட்டம் பெறுபவர்கள் தங்கள் அனைவரும்"டாக்டர்' என்று கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும்.
எனவே என்னை அழைக்கும்போது "டாக்டர்' என்று அழைக்காமல், "மிஸ்டர்' என்றோ, "ஸ்ரீ' என்றோ போட்டு அழையுங்கள். மேன்மை தாங்கிய என்று அழைப்பது எனது (கவர்னர் ஜெனரல்) பதவிக்குக் கொடுக்கும் மரியாதை என்பதால் அதனை மட்டும் ஏற்றுகொள்கிறேன்'' என்றார். இதுவல்லவா பெருந்தன்மை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.