
சாதனையாளர்கள் பலரது வாழ்விலும் வறுமையிலும் கோரத் தாண்டவம் ஒருமுறையாவது நிகழ்ந்திருக்கும். அப்படிதான் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்விலும் நிகழ்ந்தது.
சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அவர் படித்துகொண்டிருந்த சமயம். சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு திடீரென செல்ல வேண்டிய சூழல். ஆனால், பயணச்சீட்டு வாங்குவதற்குப் போதிய பணமில்லை.
உடனே அப்துல் கலாம் மூர்மார்க்கெட் சென்றார். தாம் அடிக்கடி சென்று புத்தகங்களை வாங்கும் கடை உரிமையாளரைச் சந்தித்தார். தமது நிதி நெருக்கடியைச் சொல்லி, தனது சொந்தப் புத்தகத்தை விற்பனைக்கு ஏற்குமாறு கூறினார். கடைக்காரரோ கலாமை பரிதாபத்தோடும், வருத்தத்தோடும் பார்த்தார். பிறகு ஒரு யோசனையைத் தெரிவித்தார்.
'பணத்தைக் கடனாகக் கொடுக்கிறேன். உங்களிடம் எப்போது பணம் கிடைக்கிறதோ, அப்போது கொண்டு வந்து கொடுங்கள். உங்கள் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்'' என்றார் கடைக்காரர்.
இப்படி கடைக்காரர் சொன்னதும் கலாமின் முகத்தில் புன்னகை, அதே நேரத்தில் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை அப்துல் கலாம் தனது சொற்களால் பிற்காலத்தில் கூறியிருந்ததாவது:
'என் அதிர்ஷ்டத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனேன். என் புத்தகத்தை இழக்காமல் என்னால் ஊருக்குப் போக முடிந்தது. புத்தகங்களை நேசித்த எனது கடைக்கார நண்பர், தனது வாக்கைக் காப்பாற்றினார். அந்தப் புத்தகம் பல ஆண்டுகளாக என்னுடனே இருந்தது. மற்றவர்களுக்குப் பரிவு, விரும்பிகளின் விநோதமான உலகம் ஆகியவற்றுக்கான நினைவுச் சின்னம் அது'' என்று நெகிழ்ந்துரைத்தார் அப்துல் கலாம்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.