
மேக்னடிக் ரிஸனன்ஸ் ஸ்கேன் எனப்படும் எம்.ஆர்.ஸ்கேன் கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த ரேமண்ட் வி.டமடியன் 1969இல் கண்டுபிடித்தார்.
கம்ப்யூட்டரைஸ்ட் ஆக்ஸியல் டோமோகிராஃபி எனும் கேட் ஸ்கேன் கருவியை இங்கிலாந்தைச் சேர்ந்த காட் ஃபிரேஹவுன்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆலன் கார்கேக் 1972இல் கண்டுபிடித்தனர்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் லெட்டர் பாக்ûஸ ஃபிலிப் டௌனிங் என்பவர் 1891இல் கண்டுபிடித்தார்.
மெட்டல் டிடெக்டரை அலெக்ஸாண்டர் கிராம்பெல் 1881இல் கண்டுபிடித்தார். நவீன முறையிலான சிறிய மெட்டல் டிடெக்டரை ஜெர்னார்டு ஃபிஸ்னர் என்பவரால் 1931இல் கண்டுபிடித்தார்.
லிஃப்ட் முறையை அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரேவ்ஸ் ஒடிஸ் 1852இல் கண்டுபிடித்தார். 1857இல் நியூயார்க்கில் உள்ள ஹாவார்ட் வியாபாரக் கூடத்தில் இது பொருத்தப்பட்டது.
பார்கோட் எனப்படும் குறியீட்டு கோடு முறையை ஜோசப் உட்லண்ட், பெர்னார்ட் சில்வர் 1952இல் கண்டுபிடித்தனர்.
ஒலிபெருக்கியை அமெரிக்காவைச் சேர்ந்த ரைஸ் கெல்லாக் என்பவர் 1924இல் கண்டுபிடித்தார்.
கார்டியாக் பேஸ்மேக்கரை கண்டுபிடித்தவர் வில்சன் க்ராட்பேட்ச்.
சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் பேட்ரிக், ராபர்ட் எட்வர்ட் ஆகியோர் உருவாக்கினர். முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் ப்ரௌன், 1978 ஜூலை 25இல் பிறந்தது.
ஜீன் தெரபி எனும் மரபணுவியலைக் கண்டறிந்து முதல் மரபணு சிகிச்சையை பிரான்ûஸ சேர்ந்த டாக்டர் ஆண்டர்சன் 1990இல் அளித்தார்.
ஆஸ்பிரின் மருந்தை டாக்டர் ஃபெலிக்ஸ் ஹாஃப் மென் என்பவர் 1899இல் கண்டுபிடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.