தெரியுமா?

உலகில் சில நூதன நாடுகள் உள்ளன. இவை சொந்த பணம், தபால் தலை, ராணுவம் உள சிலவற்றை வைத்திருந்தும், ஐ.நா.அங்கீகாரமோ, மற்ற நாடுகளின் ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றன.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

உலகில் சில நூதன நாடுகள் உள்ளன. இவை சொந்த பணம், தபால் தலை, ராணுவம் உள சிலவற்றை வைத்திருந்தும், ஐ.நா.அங்கீகாரமோ, மற்ற நாடுகளின் ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றன.

டிரான்ஸ்னிஸ்டிரியா: மால்டோவாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் உள்ளது. மற்ற நாடுகள்,ஐ.நா. என எதுவுமே இதனை அங்கீகரிக்கவில்லை. தன் பகுதிக்குள் செலவு செய்ய ஏதுவாய் பண நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது.

சீலாந்து: இரண்டாம் உலகப் போரின்போது, பயன்படுத்தப்பட்ட கடற்கோட்டை உள்ளது. இன்று தனி நாடு. அதன் முக்கியஸ்தர் தன்னை அந்த நாட்டின் இளவரசராக அறிவித்துக் கொண்டு ஆட்சி செய்கிறார். இவர் ஒரு முன்னாள் கடற் கொள்ளையராம். இங்கு பாஸ்போர்ட், ரேடியோ நிலையம், தபால் நிலையம், கால்பந்து அணி கூட உண்டு.!

சோமாலிலாந்து: தேர்தல்களால் செயல்படும் அரசு, நிலையான பொருளாதாரம், ராணுவம் உண்டு. இது சோமாலியாவின் ஒரு பகுதி என பலரால் நினைக்கப்படுகிறது. இந்த நாட்டை எந்த நாடும் அங்கீகரிக்கத் தயாரில்லை.

லிபர்லாந்து: செர்பியாவுக்கும் க்ரோஷியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஹட் நதி: 1970-இல் ஒரு ஆஸ்திரேலிய விவசாயி அரசுடன் நிலத் தகறாரில் ஈடுபட்டார். பிரச்னை தீராதபோது, தன் இடத்தை சுதந்தர நாடாக அறிவித்தார்.

இதற்கு உள்ளாட்சி அமைப்பும் கூட உண்டு. சொந்த நாணயம், தனி தபால் தலை என எல்லாம் உண்டு. வேறு எந்த நாடும், ஐ.நா.வும் இதனை அங்கீகரிக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுடன் மீண்டும் இணைத்துக் கொண்டு விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com