தெரியுமா?

செங்குத்தாய் நீந்தக் கூடியது கடற்குதிரை.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

செங்குத்தாய் நீந்தக் கூடியது கடற்குதிரை.

தராசை முதன்முதலில் உபயோகப்படுத்திய நாடு எகிப்து.

வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை வட்டவடிவத்தில் இருக்கும்.

-முக்கிமலை நஞ்சன்

வீடுகளுக்கு எண் தரும் முறையும், கார்களுக்கு பதிவு எண் கொடுக்கும் முறையும் பிரான்ஸ் நாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர 365 நாள்கள் ஆகும். இதைத்தான் ஓர் ஆண்டு என்கிறோம். பூமியைப் போல், செவ்வாயும் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாள்கள் ஆகும். இதனால், செவ்வாய் ஆண்டு 687 நாள்களைக் கொண்டது.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய சராசரியாக 8 கிலோ முதல் 10 கிலோ கரும்புகள் தேவை. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பிரித்தெடுப்பதற்கே அந்த அளவுக்கு அதிக கரும்புகள் தேவை. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால், 60 டன் முதல் 80 டன் வரை கரும்புகள் விளையும். ஆனால், அதில் இருந்து 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ வரையே சர்க்கரையைத் தயாரிக்க முடியும்.

திரையரங்கமே இல்லா நாடு- சவூதி அரேபியா.

விவகாரத்துக்கு அனுமதி இல்லாத நாடு- பிலிப்பைன்ஸ்.

மாணவர்களுக்குத் தேர்வுகளே இல்லாத நாடு- பின்லாந்து.

பாண்டாக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு மூங்கில்கள்தான். தினமும் 12 மணி நேரத்தை மூங்கிலின் கடினமான வேர், தண்டுப் பகுதிகளைக் கடித்து உண்பதிலேயே செலவழிக்கும்.

முயல், கிளி ஆகிய இரு உயிரினங்கள் மட்டுமே கழுத்தைத் திருப்பாமல், பின்பக்கத்தில் பார்க்கும்.

விமானங்களில் பயணிக்கும்போது, தேங்காய்களை எடுத்துச் செல்ல முடியாது. ஏனெனில், உலர்ந்த தேங்காய் எரியக் கூடிய பொருளாகும்.

பூனையின் கண்களில் உள்ள சிறப்புப் பூச்சு இருப்பதால், இரவு நேரங்களில் நன்றாகப் பார்க்க உதவுகிறது. இது ஒளியை எதிரொலிக்கக் கூடிய தன்மையையும் பெற்றிருக்கிறது. பூனை குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, வேங்கைப் புலி போன்ற பிராணிகளுக்கும் இருளில் கண்கள் மின்னும்.

இயற்கையிலேயே அழகுற அமைந்த கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' எனும் தகுதி பெறுகிறது. தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரை, ஒடிஸ்ஸாவின் பூரி கடற்கரை, கேரளத்தின் கோழிக்கோடு கப்பாட் கடற்கரை, கர்நாடகத்தின் உடுப்பி பிதுப்பிரி கடற்கரைஉள்ளிட்ட 12 கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரப் பட்டியலில் இணைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com