வானம் கறுக்குது மயிலக்கா
வண்ணக் குடையை விரியக்கா
மின்னல் வெட்டுது பாரக்கா
மேளம் கொட்டுது கேளக்கா!
-
தூறல் தூவுது பாரக்கா
தோகை எனக்குத் தாஅக்கா
குடையாய் நானும் பிடிப்பேனே
குதித்து குதித்து நடப்பேனே!
அழகிய பறவை நீயக்கா
ஆடும் ஆட்டம் எழிலக்கா
வண்ணம் உனக்குச் சிறப்பக்கா
மலைதான் வாழும் வீடக்கா!
-
உச்சந் தலையில் பூங்கொத்தோ?
குச்சிக் கால்கள் மாங்கொத்தோ?
சித்திர விழிகள் உனக்கக்கா
தேசிய பறவை நீயக்கா!
-கருமலைப்பழம் நீ, வியாசர்பாடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.