
காரில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை முதலில் கட்டாயமாக்கிய நாடு ஆஸ்திரேலியா.
உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. அவற்றுள் அட்லாண்டிக் பெருங்கடல் 133 நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
மும்பைக்கும் தாணேவுக்கும் இடையே 21 கி.மீ. நீளம் சுரங்கப் பாதை உள்ளது. 7 கி.மீ. நீளம் கழிமுக கடல்பகுதியின் அடியில் அமைகிறது. இது இந்தியாவில் கடலுக்கு அடியில் இருக்கும் முதல் சுரங்க ரயில் பாதையாகும். -மகாலெக்ஷ்மி சுப்ரமணியன்
90 சதவீதம் எரிமலைகள் தண்ணீருக்கு அடியில்தான் உள்ளன.
உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.
முதன்முதலில் வினாக்குறியைப் பயன்படுத்திய நாடு-லத்தீன்.
கைரேகையைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முறையை அறிந்தவர்- எட்வர்ட் ஹென்றி. -த.சீ.பாலு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.