எறும்பு

சின்னச் சின்ன எறும்பு சீராய் நகரும் எறும்பு
எறும்பு
Published on
Updated on
1 min read

சின்னச் சின்ன எறும்பு

சீராய் நகரும் எறும்பு

ஒன்றன் பின்னால் ஒன்று

ஒழுங்காய் செல்லும் எறும்பு!

-

நுண்துளை இருந்தால் போதும்

நுழையும் எளிதாய் உள்ளே

சர்க்கரை புட்டி உள்ளும்

சர்க்கஸ் போல் செல்லும்!

-

சும்மா இருப்பதே இல்லை

சுறுசுறு என்றே இருக்கும்

உணவுத் துகளை இழுக்கும்

உண்டியல் வைத்தா சேர்க்கும்!

-

சோம்பல் என்பது மனிதன்

சொல்லும் சொல்லே ஆகும்

சிற்றுயிர் எறும்பு இதற்கு

செயலே உலகம் ஆகும்!

வசீகரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com