
ஒடிஸ்ஸாவின் கியான்ஜோர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோடா நகரத்தில் உள்ள பனஸ்பாணி ரயில் நிலையம்தான் நாட்டின் மிகச் சிறிய ரயில் நிலையம். இதன் நீளம் வெறும் 140 மீ. ஆகும். ஒரே நடைமேடை.
ரூர்கேலா நகரிலிருந்து 148 கி.மீ. உள்ள ரயில் நிலையத்துக்குள் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த இயலாது. இந்த வழியாக பிரம்மாபூர்-டாட்டா நகர் வந்தே பாரத் ரயில், இரண்டு எக்ஸ்பிரஸ்கள் தினமும் கடந்து செல்கின்றன. இயற்கை கொஞ்சும் பூமியான இங்கு இரும்புத் தாது நிறைய கிடைக்கிறது. இங்கு இறங்கி கந்தாகர், கண்டிபங்கா நீர்வீழ்ச்சிகளை காணலாம். யானைகள் நிறைந்த கிர்புரு கோடை வாசஸ்தலம் அருகில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.