ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்!

8 முதல் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பூங்கா பிரிவில் தங்கப் பதக்கமும், சாலைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ள ஸ்ரீரித்திக், 'ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்'' என்கிறார்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்!
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 5 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற 63-ஆவது தேசிய அளவிலான ஸ்கேட் போர்டிங் சாம்பியன் போட்டியில், 8 முதல் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பூங்கா பிரிவில் தங்கப் பதக்கமும், சாலைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ள ஸ்ரீரித்திக், 'ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெல்வதே லட்சியம்'' என்கிறார்.

சென்னை மாம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பணியாளர் ரமேஷ் - குடும்பத் தலைவி தனதீப்திகா ஆகியோரின் மகனான இவர், மாம்பாக்கம் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

"எனக்கு ஒன்பது வயதாகிறது. ஐந்தாம் வயதிலேயே மேடவாக்கம் ஜி ஸ்கேட் பார்க்கில், பயிற்சியாளர் மருத்துவர் துரை மாஸ்டரிடம் பயிற்சிக்குச் சேர்ந்தேன். 2022, 2023-ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றேன்.

'ஸ்கேட்போர்ட்' என்பது பலகையில், நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விளையாட்டு உபகரணம். இது சறுக்கி விளையாடப் பயன்படுகிறது. இது மேப்பிள் மரத்தால் செய்யப்பட்டு பாலியூரிதீன் சக்கரங்களைக் கொண்டிருக்கும்.

2023-இல் பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட சண்டிகரிலும், 2024-இல் பெங்களூரிலும் நடைபெற்ற தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில், 8-10 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அமைப்பின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்றேன். இந்த ஆண்டு நடந்த போட்டியில் பூங்கா பிரிவில் தங்கப் பதக்கமும், சாலைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றேன். இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்றவர்களில் பல்வேறு பிரிவுகளில் 35 பதக்கங்களை வென்றனர்.

தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைக்கும் வகையில், ஸ்கேட் போர்டிங்கில் பயிற்சிகளைப் பெறுவேன். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெல்வதே எனது லட்சியம்.

போட்டிகளில் பங்கேற்றாலும் எனது பள்ளிப் படிப்பும் பாதிக்காத வகையில், பள்ளி நிர்வாகமும் உறுதுணையாக இருக்கின்றனர். எனது பெற்றோரும் எனது கல்விப் பணிக்கும், விளையாட்டில் சாதிக்கும் நிகழ்வுகளுக்கும் நல்ல வழிகாட்டுதல்களை அளிக்கின்றனர்'' என்கிறார் ஸ்ரீரித்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com