'கான்சர்' என்ற ஆங்கிலச் சொல் 'கார்க்கினால்' என்ற சொல்லில் இருந்து உருவானது.
சர்க்கரையை கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
உலகிலேயே மிகவும் உயரமாக வளரக் கூடியவர்கள் டச்சுக்காரர்கள். அவர்களின் சராசரி உயரம் ஆறடி 1 அங்குலம். சராசரி உயரம் கொண்ட ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்களைவிட 10 செ.மீ. அதிகமாகும்.
ஒட்டகச் சிவிங்கியால் தன் நாக்கை, தன் காதுகளைத் தொடும் அளவுக்கு நீட்ட முடியும்.
பாடும் வானம்பாடியின் நீளமான நாக்கு குழல் போன்றது. அதன் முக்கிய உணவு தேன்.
ஆண் மயில்கள் தோகை விரித்தாடுவது பார்க்கப் பரவசமாக இருக்கும். அது மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆடவில்லை. பெண் மயிலைக் கவர்ந்து இனச் சேர்க்கை புரியவே ஆடி மகிழ்கிறது.
-முக்கிமலை நஞ்சன்
திருக்குறள் மூலத்தை முதலில் அச்சோற்றியவர் தஞ்சை ஞானப்பிரகாசம்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.