தெரியுமா?

தெரியுமா?

நாம் அழாவிட்டாலும் நாள்தோறும் நம் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. இதில், 7 சொட்டு ஆவியாகிறது. மீதி 6 சொட்டுகள் மூக்கின் வழியே இறங்கி, உடலில் கலந்துவிடுகிறது.
Published on

நாம் அழாவிட்டாலும் நாள்தோறும் நம் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. இதில், 7 சொட்டு ஆவியாகிறது. மீதி 6 சொட்டுகள் மூக்கின் வழியே இறங்கி, உடலில் கலந்துவிடுகிறது.

கைகளில் உள்ள ஐந்து விரல்களும், நகங்களும் ஒரே மாதிரியாக வளர்வதில்லை. நடுவிரல் நகம் மற்ற விரல் நகங்களைவிட வேகமாக வளர்கிறது. கட்டைவிரல் நகமே நிதானமாக வளர்கிறது.

மிஜோ மக்களின் மொழியில் 'மி' என்பது மனிதனையும், 'ஜோ' என்பது மலையில் வசிக்கும் மனிதன் என்று பொருள். மலைகள் நிரம்பிய பகுதி என்பதால், 'மிஜோராம்' என்று பெயர் பெற்றது.

பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்துகளில் தயாராகும் புத்தகங்களைத் தபாலில் அனுப்ப தபால் தலை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை.

தக்காளி என்பது காய்கறியா, பழமா என்பது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் 1893இல் விசாரணைக்கு வந்தது. பின்னர், அது காய்கறி என தீர்ப்பானது. தக்காளியைப் போல, கத்தரிக்காய், ஆலிவ், அவகாடோ, வெள்ளரி, பூசணி, மிளகாய் போன்றவையும் காய்கறியாகக் கருதப்படும் பழங்களாகும்.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

சென்னையில் பேரி திம்மனின் சகோதரர் சின்னவெங்கடாத்திரியால் ஆங்கிலேய அரசுக்குப் பரிசு அளிக்கப்பட்ட இடம்தான் தற்போதைய ஆளுநர் மாளிகை இருக்கும் இடம். அமைந்தகரைக்கு அருகேயுள்ள 'செனாய் நகர்', அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த ஜே.பி.எஸ்.செனாய் என்பவரின் பெயரில் உருவாக்கப்பட்டதாகும். முத்தியாலுப்பேட்டையில் உள்ள நாகு செட்டிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில்தான் முதன்முதலில் கதாகாலட்சேபம், இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு ஆகியன நிகழ்த்தப்பட்டுள்ளன.

த.சீ.பாலு, அத்திப்பட்டு.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும், மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.

தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரை குடிக்கவே குடிக்காது.

மீன்கள் கண்ணீர் விடாது. அவற்றுக்கு கண்ணீர் சுரப்பி கிடையாது.

முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com