படித்தவர்கள் மிகுந்த கியூபா
காரிபியன் கடலில் உள்ள பெரிய தீவான கியூபா நாட்டில், படித்தவர்கள் 99 சதவீதம் பேர் உள்ளனர். இங்கு 'ஆயிரம் நோயாளிகளுக்கு 8.5 மருத்துவர்கள்' என உலகிலேயே மிக அதிகமான மருத்துவர்கள் உள்ளனர். வளரும் நாடுகளானது மருத்துவ உதவி என கேட்டால், உடனே அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நாட்டின் இதர சிறப்பம்சங்கள் அறிவோம்.
இங்கு சுற்றுலாப் பயணிக்கான டாலர் மாற்றுவிகிதத்தில் பயன்படும் நாணயமும், உள்ளூர் மக்களுக்கான நாணயமும் என இரு வகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
கியூபாவை புரட்சி செய்தபோதும், பின்னர் நாட்டையே ஆண்ட போதும் பிடல் காஸ்ட்ரோவை சி.ஐ.ஏ. குறைந்தது அறுநூறு முறையாவது தீர்த்துக் கட்ட முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது.
அரசின் கருத்துகளுக்கு மாற்று கருத்து கூறக் கூடாது.
'டோமினோஸ்' என்ற விளையாட்டு இங்கு பிரசித்தி பெற்றது.
உலகிலேயே மிக சிறிய பறவையான 'ஹம்மிங் தேனி' இங்குள்ளது.
பூங்காக்கள், பள்ளிகள், தெருக்களின் பக்கவாட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் செஸ் ஆடுவர்.
மிகச் சிறந்த சுருட்டுகளில் கியூபா சுருட்டுக்கு முக்கிய இடம் உண்டு. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் விரும்பி புகைத்தது கியூபா சுருட்டு. ஆண்டுதோறும் இங்கு 'சுருட்டு திருவிழா' நடைபெறும்.
கோகோ கோலா'வுக்கு இங்கு தடை. இதேபோல் தடை விதித்துள்ள மற்றொரு நாடு வட கொரியா.
பிரபல ஆங்கில எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே 20 ஆண்டுகள் கியூபாவில் இருந்தபோதே 'தி ஓல்டு மேன் அன்ட் த ஸீ', 'ஹூம் த பெல்ஸ் டோல்ஸ் தேர்' ஆகிய நாவல்களை எழுதினார்.
அமெரிக்காவின் பிரமாண்ட பழைய கார்களுக்கு கியூபா பிரபலம். இதனை 'யாங்க் டாங்கிகள்' என அழைப்பர். இந்தப் பெயரில் இப்போதும் 1.60 லட்சம் கார்கள் உள்ளன. கார்கள் டாங்கிகளை போல் பிரம்மாண்டமாக உள்ளதால், இந்தப் பெயர்.
சமூக ஊடகங்களில் தவறான அல்லது மற்றவருக்கு இழுக்கை தருவது போல் செய்தி வெளியிட்டால், இந்த நாட்டில் கடும் தண்டனை உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.