
*தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம்.
த.நாகராஜன், சிவகாசி.
*கடந்ததில் இருந்து கற்றுகொண்டு வாழ தொடங்கு.
*எங்கு முடிகிறதோ, அங்கு துவங்குகின்றது.
மஞ்சுதேவன், பெங்களூரு.
*கோபம் படுகுழியில் தள்ளும். சாந்தம் சிகரத்தில் தொட வைக்கும்.
தேடுவது பொன்னும் பொருளும் புகழுமாகட்டும். தொலைவது பொறாமையாகட்டும்.
அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.
*எல்லா சிரிப்பும் சிரிப்பதற்காக மட்டுமல்ல; சிலவற்றை மறைப்பதற்காகவும்தான்!
அ.கருப்பையா, பொன்னமராவதி.
*உணவு, அமைதி, சிரிப்பு ஆகிய மூன்றும் உலகின் தலைசிறந்த மருத்துவர்கள்.
*பணம் வாழ்க்கையின் ஆதாரம். பாசம் வாழ்க்கையின் அஸ்திவாரம்.
ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.