
மைனா மைனா மைனா
மனதை மயக்கும் மைனா
நைனா வாங்கித் தந்த
நளின நடையழகு மைனா!
குயிலின் இனிய குரலில்
கூவும் குட்டை மைனா
மயிலின் வண்ணச் சிறகின்
மையலைக் கொண்ட மைனா!
பைய பைய பறந்து
பாசமாய் கூடும் மைனா
தையல் மகளிர் அருகில்
தைரியமாய் அமரும் மைனா!
நொய்யரிசி போட்டால் நோகாமல்
நொடியில் பறந்துவந்து
ஓய்யாரமாய் கூடி தின்று
ஒன்றாய் பறக்கும் மைனா!
ஒன்று பட்டால் உண்டு
நன்று என்ற நீதியை
நன்றாய் நமக்கு போதிக்கும்
நாளும் கூடும் மைனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.