தெரியுமா?

பறவைகளில் மிகக் குறைந்த சிறகுகளைக் கொண்ட பறவை தேன்சிட்டு. இதன் உடலில் சுமார் 950 சிறகுகள் உள்ளன.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

பறவைகளில் மிகக் குறைந்த சிறகுகளைக் கொண்ட பறவை தேன்சிட்டு. இதன் உடலில் சுமார் 950 சிறகுகள் உள்ளன.

பேஸ் பால் விளையாட்டுக்கு ஓர் அணிக்கு ஒன்பது பேரும், ஹாக்கிக்கு பதினோரு பேரும், போலோவுக்கு நான்கு பேரும், வாலிபாலுக்கு ஆறு பேரும், கூடைப்பந்துக்கு ஐந்து பேரும் விளையாடுவர்.

முதலில் ஆண்டையும், அடுத்து மாதத்தையும், கடைசியில் தேதியையும் எழுதுபவர்கள் ஜப்பானியர்கள்.

-ஆர்.ஜெயலட்சுமி.

43 மொழிகளின் தாயாக உள்ள தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு. செனகல் மொழிச் சொற்களில் 21 சதவீதம் தமிழ்ச் சொற்கள். ஜப்பானிய மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன.

மொரீசியஸ் தீவுகளில் ரூபாய் நோட்டில் ஆங்கிலமும், அடுத்து தமிழும், அதற்கடுத்து ஹிந்தியும் இடம்பெற்றுள்ளன. எண்களிலும் தமிழ் எண்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

'காது நன்றாகக் கேட்பது அதிகாலை மூன்று மணிக்கு, மூளை சுறுசுறுப்பாக இயங்குவது விடியற்காலை 4 மணிக்கு, நன்றாகப் பசி எடுப்பது காலை 8 மணிக்கு, உடல் சுறுசுறுப்பாக இயங்குவது பிற்பகல் 2 மணிக்கு..' என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களின் கீழ்த்தாடை மட்டுமே அசையும். மேல்தாடையை அசைக்க முடியாது. அதைப் போல விபத்து போன்றவற்றால் சீக்கிரம் பாதிக்கப்படுவது கீழ்த்தாடையே! தாடை எலும்புகள் மிக உறுதியானவை. இந்தத் தாடைகளால் 280 கிலோவுக்கும் மேற்பட்ட எடையுள்ள பொருள்களையும் கடித்துத் தூக்கலாம்.

உலகில் தேசியக் கொடிகளில் அதிகம் இடம்பெறும் சின்னம் நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம். நட்சத்திரத்துக்கே நட்சத்திர அந்தஸ்து.

மனிதர்களின் முதுகெலும்பு பார்ப்பதற்கு மிக நீளமாகவும், பெரியதாகவும் இருப்பது போல் தோன்றினாலும், அதன் மொத்த எடை 35 கிராம்தான்.

-நெ.இராமகிருஷ்ணன்.

காண்டாமிருகம் வனத்தில் வாழ்ந்தாலும், சைவ உணவையே உண்டு வாழ்கிறது.

'சுந்தரகாண்டம்' என்பதில், 'சுந்தரன்' என்பது அனுமனின் பெயர்.

குதிரைகள் முன்னங்கால்களை ஊன்றியும், மாடுகள் பின்னங்கால்களை ஊன்றியும் எழும்.

-ஆர்.கே.லிங்கேசன்.

ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டு

களில் ஒன்று சுமோ. இந்த விளையாட்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலிய நாட்டில் தோன்றியதாகும்.

-உ.இராமநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com