
..
முன்வீட்டுத் திண்ணையில் அணில் குஞ்சு ஒன்று
முதுகோடு முதுகாய் முகமே அழகாய் எதையோ
தின்று கொண்டிருந்தது பார்த்து மகிழ்ந்தேன்
புத்தகம் படிப்பது போலத் தெரிந்தது
--
கழுகு ஒன்று பறந்து வந்தது
அணில் குஞ்சினை தூக்க நினைத்தது
கை கம்பை எடுத்து வீசினேன்
அடிபட்டு பறந்து சென்றுவிட்டது!
--
காக்கைக் குஞ்சொன்று மரத்திலிருந்து விழுந்தது
அணில் குஞ்சொன்று அதற்கு உணவு ஊட்டியது
காக்கைக் கூட்டம் கூடி வந்தது
குஞ்சைத் தூக்கி மரக்கிளையில் வைத்தேன்!
--
அணில் குஞ்சும் மர மேறி மறந்தது
அது என் மனதில் படமாய் விரிந்தது
அணில் குஞ்சுக்கு சுவரில் அரிசி போட்டேன்
இரண்டு மூன்று குஞ்சுகள் கூடித் தின்றன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.