கொண்டாடு

கோடைமழை பெய்தாலே கோலாகலம் கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கோடைமழை பெய்தாலே கோலாகலம்

கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்

காய்ந்திட்ட மரம்செடிகள் விழித்துவிடும்

கால்நடைகள் துள்ளாட்டம் போட்டுவிடும்

--

குளம்குட்டை சற்றேனும் நிரம்பிவிடும்

கொடும் தாகப் பிணிவிட்டு ஓடிவிடும்

கொட்டுகிற மழையைநாம் பூசிப்போம்

குட்டைகளில் மழைநீரைச் சேமிப்போம்

--

குளிர்காற்று நமைவந்து தழுவட்டும்

குதூகுலம் மனதில்வந்து தங்கட்டும்

கோடைமழை கிடைக்காது கொண்டாடு

கருத்தாக விதைவிதைத்து மகிந்ழ்தாடு!

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com