மரங்கள்...

மரங்கள் யாவு மிங்கே நாம் பெற்ற வரங்கள் தம்பி
மரங்கள்
மரங்கள்
Published on
Updated on
1 min read

மரங்கள் யாவு மிங்கே

நாம் பெற்ற வரங்கள் தம்பி

உயிர்களின் தாய்வீடன்றோ?

உணர்ந்துநீ மதிப்பாய் தம்பி!

--

மண்ணிலே நின்று தூயக்

காற்றினை வீசக் கண்டாய்

வண்ணநல் பறவைக் கூட்டம்

வாழ்ந்திடும் விடுதி யன்றே?

--

நிழலாகி கனிக ளாகி

இலவச மருந்து மாகி

மழைவர காரண மாகி

மனிதரைக் காக்கும் தம்பி!

--

இயற்கையாம் அன்னை மண்ணில்

எழுதிய காவியம் தம்பி!

நின்றஅதன் அழகுத் தோற்றம்

நிகரிலா ஓவியம் தம்பி!

பாவலர் கருமலைப்பழம் நீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com