
உலகில் முதன்முதலில் படுக்கைகளும் தலையணைகளும் மரப்பலகைகளால் ஒன்றாக அமைந்திருந்தன. முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்துப் பயன்படுத்தினர். முதலில் படுக்கையும், தலையணையும் தனித்தனியே தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.
-உ.இராமநாதன்
நான்கு மூட்டுகளைக் கொண்ட விலங்கு யானை.
பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் தழைகள்.
கூடு கட்டி வசிக்கத் தெரியாத பறவை பெங்குவின்.
-ஏ.மூர்த்தி
ரயில் தண்டவாளங்கள் ஒன்றுபோல் ஒன்று இருக்கும் என்று நினைக்காதீர்கள். இடத்துக்குத் தக்கவாறு வேறு வேறான தண்டவாளங்களைப் போடுகிறார்கள். வனப் பகுதிகளில் ஒருவிதமான தண்டவாளங்களையும், மற்ற இடங்களுக்கு வேறு மாதிரியான தண்டவாளங்களையும் போடுகின்றனர். வனப் பகுதியில் போடப்படும் தண்டவாளங்களுக்கு 'கர்ஜிக்கும் தண்டவாளம்' (ரோரிங் ரெயில்ஸ்) என்று பெயர். வனவிலங்குகள் பயந்து ஓடும் வகையில் இந்தத் தண்டவாளத்தில் ஒருவிதமான சத்தம் வரும்.
-மா.சந்திரசேகர்
திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியவர் வையாபுரிப் பிள்ளை.
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் முதன்முதலில் வரைந்த ஓவியம் சுவாமி இராமகிருஷ்ண பரமஹ்மசரின் உருவமாகும்.
'உங்களது சிறந்த கார்ட்டூன் எது?' என்று ஆர்.கே.லட்சுமணனிடம் கேட்டபோது அவர், 'அதை இன்னும் வரையவில்லை'' என்றார்.
'1942' என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதியவர் கு.ராஜவேலு. 'இரு நகரங்களின் கதை' என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த '1942' நாவலை எழுதினார்.
-த.சீ.பாலு
வினா-விடை என்ற இன்டர்வியூவை 'நேர்காணல்' என்று தூயத் தமிழாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர் வடலூர் ராமலிங்கம் அடிகள். முதல் நேர்காணல் என்பது காசி பண்டாரத்துக்கும் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவருக்கும் 1851-இல் நடைபெற்ற உரையாடல்.
நாக்கில் நான்கு வகையான சுவை மொட்டுகள் உள்ளன. நடுப்பகுதியில் சுவை அரும்புகள் காணப்படுவதில்லை. முன்நுனிப் பகுதி உப்பு, இனிப்புச் சுவைகளை அறிய உதவுகிறது. மனிதனின் நாக்கில் சுமார் 3 ஆயிரம் சுவை அரும்புகள் உள்ளன. பசுவின் நாக்கில் 3,500 சுவை அரும்புகளும், மானின் நாக்கின் சுமார் 50 ஆயிரம் சுவை அரும்புகளும் உள்ளன.
-நெ.இராமகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.