
பிரிட்டனில் தபால் பெட்டிகள் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், செடி, கொடிகளுக்கு நடுவில் பச்சை நிற தபால் பெட்டியைக் கண்டறிவது, மக்களுக்கு கடினமாக இருந்தது. இதனால், 1874-இல் தபால் பெட்டியை சிவப்பு நிறத்தில் மாற்றினர். டல்ஹவுசி பிரபு என்பவர் இந்தியாவுக்கு அஞ்சல் துறையை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாயில் 1972-இல்தான் 'அஞ்சல் குறியீட்டு எண்' (பின்கோடு) முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது. கடிதம் என்பது படித்தவுடனே முடிகின்ற வேலை அல்ல; அதைப் பாதுகாத்து வைத்து திரும்பத் திரும்பப் படிப்பது. படிக்கும்போதெல்லாம் அதை எழுதியர்களை நினைத்து மகிழ்வதுதான் அதன் சிறப்பு.
உதகமண்டலம் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்து ராணுவ வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் கம்பீர அணிவகுப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது ஒரு வீரர் வேலைப்பாடுகளின் கூடிய பெரிய வெள்ளிக்கிண்ணத்தைக் கொண்டுவந்தார்.
வரிசையில் நிற்கும் வீரர்களின் வலது கையை நீட்டி, கிண்ணத்தில் இருப்பதை ஒரு துளி வாயில் போட்டுக் கொண்டனர். அந்த ஒரு துளி என்ன தெரியுமா? தேசத்தின் உப்பு. நாட்டுக்கு விசுவசமாக இருப்பதன் அடையாளம்தான் அந்த உணர்ச்சிமயமான விசுவாசக் காட்சி.
கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட நந்திதுர்கம் எனும் இடத்தில் பாலாறு தொடங்குகிறது. அந்த மாநிலத்தில் 93 கி.மீ. தொலைவு பயணித்து, தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ. தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. ஆகும். காஞ்சிபுரம் அருகே வயலூரில் முகத்துவாரத்தை அடைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
பாலாற்றால் தமிழ்நாட்டில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.