

வானில் தோன்றும் வானவில்
வண்ணங்கள் காட்டி ஒளிரும்
வானவில் மேடை பள்ளிகளில்
வளையவரும் துவக்கக் கல்வி மாணவர்களின்
எண்ணங்களை எழிலாய் உரைக்கும்
வண்ணங்களில் ஒளிரும் எழுத்தையும்
என்னையும் பாங்கோடு கற்கும்
எண்ணும் எழுத்தும் திட்டத்தின்
வெற்றியைக் காட்டும் வாழ்வில்
உற்று நோக்கி உயர
சற்றும் தயங்காதத் தன்மையைக்
கற்கும் பள்ளியிலே பெறலாம்!
-மு.அ.அபுல் அமீன், நாகூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.