எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
விந்தை விந்தை பூமியாம்
விண்ணில் உருளும் கோளமாம்
எந்த விபத்தும் இல்லையாம்
உயர்ந்த வேத்தில் உருளுதாம்!
கடலும் மலையும் காடுமே
குளிர்ந்த சோலை ஆறுமே
இடமும் வடிவம் மாறாது
இப்பூமி கூட உருளுதாம்!
கோடி கோடி கட்டடங்கள்
கோபுரம் போலும் மரங்கள்
ஓடிப் பாயும் அருவிகள்
உலக மோடு உருளுதாம்!
அண்டம் அடங்கும் கோள்களில்
இங்கு மட்டும் உயிர்களாம்!
விண்டு விஞ்ஞானம் உரைக்கும்
உண்மை நமக்கும் பெருமையாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.