மண்ணிலும் இல்லாமல், விண்ணிலும் இல்லாமல் ஆனாந்தரமாக அந்தரத்தில் மிதக்கும் நிலையை 'திரிசங்கு' என்பார்கள். அதுபோல் அந்தரத்தில் நிற்கும் கட்டடம் வர இருக்கிறது. பல கட்டட ஆச்சரியங்களுக்கு பெயர் பெற்ற துபையில்தான் 'தொங்கு கட்டடம்' தயாராகிறது.
உலகின் முதல் தொங்கும் கட்டடத்துக்கு 'அனலெம்மா டவர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் செயல்படும் 'கிளவுட்ஸ்' கட்டுமான நிறுவனத்தினரால் அறிவியல் புதுமையான வானளாவியக் கட்டடத்தை உருவாக்கப் போகிறது. தொங்கும் கட்டடம், புவியைச் சுற்றியுள்ள புவி ஒத்திசைவற்ற சுற்றுப்பாதையில் இந்தக் கட்டடம் நிறுத்தப்படும்.
சிறுகோளிலிருந்து தொங்கவிடப்பட்ட சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கட்டடம் தொங்கும் நிலையில் அமையும். சிறு கோள் விண்ணில் புவியைச் சுற்றிவரும்போது, கட்டடமும் அந்தரத்தில் புவியைச் சுற்றிப் பயணிக்கும். ஒரு கிரகத்தில் வாழும் உணர்வு அந்தத் தொங்கும் கட்டடத்தில் வசிப்பவர்களுக்குக் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.