தெரியுமா?

அனிமோ மீட்டரில் ஒரு சுழலும் சக்கரம் இருக்கும். காற்றின் வேகத்துக்கு ஏற்ப அது சுழலத் தொடங்கும். காற்றின் சுழற்சியை இது அளவிடும்.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

அனிமோ மீட்டரில் ஒரு சுழலும் சக்கரம் இருக்கும். காற்றின் வேகத்துக்கு ஏற்ப அது சுழலத் தொடங்கும். காற்றின் சுழற்சியை இது அளவிடும்.

சீதாப்பழமானது ஆங்கிலத்தில் 'சுகர் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது. இதில், வைட்டமின் சி, கால்சியம், புரதம், கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் மிகுதியாக உள்ளன.

 ஒரு கடல் மைல் என்பது 1.852 கி.மீ. ஆகும்.

மனித உடலில் வியர்க்காத பகுதி உதடு.

காட்டுப்பூனைகளும் வீட்டுப் பூனைகள் போன்றே இருக்கும்.

சுரங்க மாநிலமான ஜார்கண்டில் நாட்டின் மொத்தமுள்ள கனிம வளத்தில் 40 சதவீதம் இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, 1885-ஆம் ஆண்டில் தஞ்சாவூர், திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் கிளைச்சிறைகள் கட்டப்பட்டன. இதில், தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டனா அருகே 52 ஏக்கரில் சிறை அமைந்துள்ளது.

ரயில் பாதைக்கு நடுவே சோலார் பேனல்கள் பொருத்தப்படும் நாட்டின் முதல் நகரமாக வாரணாசி இருக்கிறது. 70 மீட்டர் தூரம் 28 பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 15 கிலோவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். இவற்றை வசதிக்கேற்ப இடமாற்றம் செய்ய முடியும். சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த முயற்சி வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com