பல பொருள் - ஒரு சொல் பயில்க

ஐந்தை அடுத்து அமைவது ஆறு; ஆழக் கடலில் கலப்பதோ ஆறு!
Published on
Updated on
1 min read

ஐந்தை அடுத்து அமைவது ஆறு;

ஆழக் கடலில் கலப்பதோ ஆறு!

பயணம் தொடரும் பாதையும் ஆறு;

பண்புள்ளோர் வாழ்வின் வழியும் ஆறு!

-

இல்லத்து வாயிலில் இருப்பது படி;

இருகண் திறந்திட எண்ணெழுத்துப் படி!

முன்னோர் முகந்து அளந்தது படி;

மூத்த இப்புவிக்கு முற்பெயர் படி!

-

நான்கில் ஒன்றாம் பாகமே கால்;

நடந்து முன்னேற நற்றுணை கால்!

நாட்டும் பந்தலில் நாற்புறம் கால்;

நளினமாய் வீசும் காற்றுமே கால்!

-

வாழும் இல்லம் வளம்சேர் அகம்;

வையத்து மாந்தர் உள்ளமும் அகம்!

புறமென்னும் சொல்லின் எதிர்மறை அகம்;

புல்லிய அகந்தையின் அடிவேர் அகம்!

-

விறகை எரித்தபின் விஞ்சுவது கரி;

விலங்கில் பெரிய யானையோ கரி!

விரியும் வழக்கினில் சாட்சியும் கரி;

விரும்பும் சுவைசேர் மிளகும் கரி!

குரு. சீனிவாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com