பாண்டா என்பது கரடி இனத்தைச் சேர்ந்த விலங்கு. பாலூட்டியான இது கருப்பு, வெள்ளை நிறத்தில் நூதன அழகுடன் காட்சியளிக்கும். உலக வன விலங்கு நிதியத்தின் முயற்சியால் தற்போது இந்த இனம் பெருகி வருகிறது.
பாண்டாவின் காதுகள், கண் சுற்றுகள், கால்கள் மற்றும் தோல் பட்டைகள் கருப்பு நிறத்திலும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் இருக்கும். இதன் முக்கிய உணவு மூங்கில்.
சீனாவின் சிச்சுஆன் மலைப் பகுதிகள், கான்சு மற்றும் சான்க்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தியாவின் இமயமலை, சிக்கிம் பகுதிகளிலும் பாண்டாக்கள் உண்டு. சிவப்பு வண்ண பாண்டாவான இது சிக்கிம் மாநில விலங்கு. சீனாவின் தேசிய சின்னம் டிராகன் என்றாலும், பாண்டாவுக்கும் பெரிய அந்தஸ்து உண்டு.
காட்டில் இருக்கும் பாண்டாக்கள் 30 வருடங்களும், நாட்டில் உள்ளவை 20 வருடங்களும் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாண்டாவின் தோல் அடர்ந்த ரோமங்கள் நிறைந்தது. ஆண் பாண்டாக்களைவிட பெண் பாண்டாக்கள் சிறியவை. குழந்தை பிறந்து 40 நாள் கழியும் போது தான் கண் திறக்கும். முதலில் இளம் சிவப்பு நிறத்திலும், பிறகு வழக்கமான நிறத்துக்கும் மாறும். ஆறாவது மாதம் மரம் ஏறும்.
பாண்டாவை வருட வாடகைக்குப் பல நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்கியுள்ளது சீன அரசு. பாண்டா மற்ற நாடுகளில் இருக்கும் போது குட்டியீன்றால், அதுவும் சீனாவுக்கே சொந்தம். வாடகைக் காலம் முடிந்ததும் பாண்டாவை குட்டியுடன் பத்திரமாகத் திருப்பி அனுப்பவேண்டும்.
சரி, வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகள் பாண்டாவை ஏன் வாங்குகின்றன? 'தங்கள் மிருகக்காட்சி சாலையில் பாண்டா இருப்பதாக விளம்பரம் செய்தால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், அதன் மூலம் வருவானம் கிடைக்கும்' என்பதால்தான்.
இனி எந்தந்த நாடுகளில் பாண்டாக்கள் உள்ளன என உத்தேசமாக அறிந்துகொள்வோமா?
சீனா -1864, அமெரிக்கா-9, ஜப்பான்-8, பெல்ஜியம்-5, ஜெர்மனி-4, பிரான்ஸ்-3, தென் கொரியா-3, ஸ்பெயின்-3, மலேசியா-3, இங்கிலாந்து-2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.