
பறவைகள் இரவு நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஊர் சுற்றுவதில்லை. தன் குட்டிகளுக்கு வாழ்க்கைப் பயிற்சியை அளிக்கின்றன. அதிகமாகச் சாப்பிடாமல், எவ்வளவுத் தானியங்கள் இட்டுக் கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்லும். போகும்போது எதையும் எடுத்துப் போவதில்லை. இருள் சூழும்போதே உறங்கத் தொடங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.
-த.நாகராஜன், சிவகாசி.
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை "மாத்திரை' எனக் கூறுவர். கண் இமைக்கும் நேரம் அல்லது ஒரு நொடியே ஒரு மாத்திரை எனக் கூறுகிறது இலக்கண நூல்.
"ஓம்' என்னும் மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார்.
-கே.விவேகானந்தன், கோவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.