

மகாத்மா காந்தியை முதலில் 'காந்திஜி' என்று குறிப்பிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 'காந்தியடிகள்' என்று பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க. 'மகாத்மா' என்று பட்டம் கொடுத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
மெக்சிகோவில் உப்பை கடவுளாக வழிபட்டனர். ஐரோப்பாவில் உப்பை சம்பளமாக வழங்கினர். கடல்நீரில் 6 சதவீதம் உப்பு உள்ளது. 5 சதவீதம் உப்புத் தன்மையுடைய மண்ணில் பயிர்கள் வளராது. மாங்குரோவ் தாவரங்கள் உப்பு நீரில் மட்டுமே வளரும்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
யானை, குதிரை இன விலங்குகள் நின்றுகொண்டே தூங்கும். யானை தூங்கும்போது, அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளும்.
சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாசத்தின் மூலம் பகை விலங்குகள் நடமாட்டத்தை உணரும் அற்புதச் சக்தி கொண்டவை.
சில வகை ஐரோப்பிய கிளிகள் வவ்வால் போல மேலே உள்ள கிளைகளைப் பற்றிக் கொண்டு தலை அதன் மார்பைப் பார்த்திருக்குமாறு ஒய்யாரமாகத் தூங்கும்.
ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகள் நான்கு கால்களையும் மடித்து, தலையை உடலின் மீது வைத்து உறங்கும்.
வாத்து தரையில் நின்றுகொண்டோ அல்லது தண்ணீரில் ஒய்யாரமாக நீந்தியவாரோ தூங்கும்.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
இந்தியாவில் இரு மாவட்டங்கள் உள்ள ஒரே மாநிலம் கோவா.
வரிசையில் நிற்கும் வழக்கம் பிரிட்டனில்தான் முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
-முக்கிமலை நஞ்சன்
பிரிட்டன் நாட்டு தபால் தலையில் நாட்டின் பெயரைக் குறிப்பது இல்லை.
-விமலா சடையப்பன்,
காளனம்பட்டி.
1938-இல் அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டபோது, கடவுள் வாழ்த்தைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தவர் வை.மு.கோதை நாயகி அம்மாள்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.