தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள பெண்டகன் என்னும் ராணுவக் காரியாலயமே உலகின் மிகப் பெரிய அலுவலகமாகும்.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

இராமகிருஷ்ணன்

அமெரிக்காவில் உள்ள பெண்டகன் என்னும் ராணுவக் காரியாலயமே உலகின் மிகப் பெரிய அலுவலகமாகும். 612 கிரவுண்டு பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் 32 ஆயிரம் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

பென்சிலில் 40 வகையான பொருள்கள் கலந்துள்ளன. பென்சிலால் நீருக்கடியிலும் எழுதலாம். ஆரம்பக் காலத்தில் பென்சில்களைப் பயன்படுத்தியது விண்வெளி வீரர்கள்தான்.

கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்து அடையாளம் கண்டறியும் அறிவானது மனிதர்களைத் தவிர, மனிதக் குரங்களுக்கும், டால்பின் மீன்களுக்கும் உண்டு.

ஜப்பானியர்களைக் காட்டிலும் அதிக நேரம் உழைப்பவர்கள் தென் கொரியர்கள். அவர்கள் வாரம் ஒன்றுக்கு 65 மணி நேரம் உழைக்கின்றனர்.

உலகிலேயே மிகவும் தட்டையாக அமைந்துள்ள நாடு மாலத்தீவுகள்தான். இந்த நாட்டில் அதிகபட்ச உயரமான மலையின் அளவு 2.4. மீ. ஆகும்.

மனிதர்களால் ஒரு நிமிடத்துக்கு 125 முதல் 160 வார்த்தைகள் தான் பேச முடியும். மூன்று விநாடிகளில் பேசுவதை ஒரு விநாடியில் நினைக்க முடியும்.

மனிதர்களின் உடல் உறுப்புகளில் மிகவும் சூடானது கல்லீரலும், சிறுநீரகமும்தான்! மிகவும் குளிர்ச்சியான உறுப்புகள் இதயமும் நுரையீரலும்தான். மனித உடலில் இருந்து வெப்பம் மட்டும் வெளியேறாவிட்டால், 24 மணி நேரத்தில் உடல் வெப்பம் 185 டிகிரி பாரன்ஹீட்டுக்கு உயர்ந்துவிடும்.

மனிதர்கள் அழாவிட்டாலும் நாள்தோறும் கண்களில் 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது. அதில், 7 சொட்டு ஆவியாகிறது. மீதமுள்ள 6 சொட்டு மூக்குக்குள் இறங்கி, உடலில் கலக்கிறது.

மனிதர்களின் இதயம் சுருங்கும்போது வேலை செய்கிறது. விரியும்போது ஓய்வு எடுக்கிறது. ஒரு நாளில் 9 மணி நேரம் வேலை செய்யும். 15 மணி நேரம் ஓய்வு எடுக்கும்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com