குட்டி ஆட்டுக்குட்டி
குறும்பு செய்யும் குட்டி
முட்டிச் செய்யும் வம்பு
முளைத் திடாத கொம்பு!
-
அம்மா என்று கத்தும்
அன்பாய் ஓடிச் சுத்தும்;
பம்மி மடுவை முட்டும்
பாலைக் குடிக்கும் மட்டும்!
-
பாலைக் குடித்து ஆடும்
"பாபா' என்றே பாடும்
வாலை ஆட்டி ஓடும்
வயலும் காடும் மேடும்!
-
குட்டைச் சுவர்மேல் ஓடும்
கும்மா ளந்தான் போடும்
கட்டிப் போட்டால் குதிக்கும்
கட்டாந் தரையை மிதிக்கும்!
-
பச்சைத் தழையைக் கடிக்கும்
பசிக்குப் பாலும் குடிக்கும்
இச்சை யோடு பிடித்தால்
எகிறித் துள்ளி ஓடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.