டயர்களில் கறுப்பு நிறம் ஏன்?
வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் ரப்பரில் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையான ரப்பர் மென்மையாக இருக்கும். அது கோடைக் காலத்தில் வெப்பத்தில் உருகி, எளிதில் ஓட்டிக் கொள்ளும் தன்மையும், குளிர் காலத்தில் உடைந்து போகும் தன்மையும் கொண்டது. எனவேதான் அந்த ரப்பர் ரசாயனப் பொருள்கள் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. இந்த வேதியியல் செய்முறை வல்கனைசிங் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வல்கனைசிங் செயல்பாட்டின் போது ரப்பருடன் கந்தகமும் மற்ற சில வேதியியல் கலவைகளும் சேர்க்கப்படுகின்றன. கார்பன் கறுப்பு நிறம் கொண்டது என்பதால் அதைச் சேர்த்து வல்கனைசிங் செய்யப்படும் டயர்கள் கறுப்பு நிறத்தில் மாறுகிறது. இதனால் டயர்கள் எப்போதும் கறுப்பு நிறத்தில் உள்ளன.
- கோட்டாறு கோலப்பன்
76 வயதில் முதல் ஓட்டு!
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரான நெல்சன் மாண்டேலா தனது 76-ஆவது வயதில்தான் முதல் தடவையாக தேர்தலில் வாக்களித்தார்.
இரண்டு மொழியில் தேசிய கீதம்!
செக்கோஸ்லோவாகியா நாட்டின் தேசிய கீதம் 2 மொழிகளில் உள்ளது. முதல் பாதி செக் மொழியிலும், இரண்டாவது பாதி லோவேக்கிய மொழியிலும் உள்ளது.
முதன் முதலில்...
முதன் முதலில் காப்பி அரபு நாட்டவரால் அருந்தப்பட்டது.
தக்காளியை முதன் முதலில் பயிர் செய்த நாடு அயர்லாந்து.
முதன் முதலில் நினைவு அஞ்சல் தலை வெளியிட்ட நாடு பெரு.
முதன் முதலில் வெற்றிலை மலேசியாவில் பயிரிடப்பட்டது.
முதன் முதலில் விண்வெளி சென்ற விலங்கு நாய்.
லேப்டாப் பராமரிப்பு!
லேப் டாப்பின் திரையை கை விரல்களைக் கொண்டு துடைக்காதீர்கள். அது கைத் தடயங்களை திரையின் மேல் பதியச் செய்யும்.
பயணங்களின்போது லேப் டாப்பை தூசி மற்றும் ஈரப் பதத்தில் இருந்து விலக்கியே வைக்கவும்.
லேப் டாப்பை வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதித்துப் பழுது நீக்க வேண்டும்.
எப்போதும் லேப் டாப்பை மேஜை போன்ற தட்டையான பரப்பின் மேலே வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
தொடர்ச்சியாக எட்டு மணி நேரத்திற்கு மேல் ஓட விடாதீர்கள்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.