மத்திய மும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள 'லோகண்ட்வாலா மினர்வா' வானத்தைத் தொடும் வகையிலான கட்டடமாகும். 301 மீட்டர் உயரத்தில், 91 தளங்களில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் நாட்டின் மிக உயரமான குடியிருப்புக் கட்டடமாகும்.
தில்லியில் 72 மீட்டர் உயரம் கொண்ட குதுப்மினார் ஸ்தூபியைவிட நான்கு மடங்கு பெரியதாகும். 'லோகண்ட்வாலா மினர்வா' கோபுரம், வணிகப் பிரமுகர்கள், பாலிவுட் மற்றும் ஃபேஷன் துறையின் பிரபலங்களின் முகவரியாக மாறியுள்ளது. இந்தக் கட்டடத்துக்கு அருகே மகாலட்சுமி கோயிலும், மும்பை குதிரை ரேஸ் மைதானமும், கடலில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்காவும் அமைந்துள்ளன.
உலக ஆடம்பரத்தின் முழு வீச்சையும் கொண்டிருக்கும் இந்தக் கட்டடம் துபை, அமெரிக்கக் கட்டடங்களுக்குச் சவாலாக அமையும்.
லோகண்ட்வாலா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தால் உருவாக்கப்படும் இந்தக் கட்டடத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் விலை 13 கோடி ரூபாயில் தொடங்குகிறது.
அடுத்து வரும் ஐந்நூறு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் காற்று, தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் வகையில் இந்தக் கட்டடம் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.