மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரிக்கெட்டுக்கு உள்ள மரியாதை ஹாக்கிக்கு இல்லை!

ஹாக்கிக்கும் தன்ராஜ் பிள்ளைக்கும் என்ன சம்பந்தமோ, அதைவிட நெருங்கிய சம்பந்தம் அவருக்கும் சர்ச்சைகளுக்கும். தொடர்ந்து 20 ஆண்டு காலமாக ஹாக்கி விளையாடி வரும் இவர் அணியிலிருந்த நாட்களைக் காட்டிலும் வெளியில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:04 pm

செல்வி சந்தானம்

ஹாக்கிக்கும் தன்ராஜ் பிள்ளைக்கும் என்ன சம்பந்தமோ, அதைவிட நெருங்கிய சம்பந்தம் அவருக்கும் சர்ச்சைகளுக்கும். தொடர்ந்து 20 ஆண்டு காலமாக ஹாக்கி விளையாடி வரும் இவர் அணியிலிருந்த நாட்களைக் காட்டிலும் வெளியில் இருந்த நாட்கள் அதிகம். மும்பை வாசியான இவர் உலகம் முழுவதும் அறியப்பட்ட தமிழர். முருகப்பா தங்கக் கோப்பை போட்டிக்காக சென்னை வந்தவரைச் சந்தித்தோம். தன்ராஜிடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.

ஆட்டத்திலிருக்கும் வேகம் வார்த்தைகளில் இல்லை. நிதானமாகப் பேசுகிறார். ஓரளவு நல்ல தமிழில் பேசும் தன்ராஜ், சில சமயங்களில் வழக்கிலில்லாத வார்த்தைகளையும் பிரயோகிக்கிறார். தாத்தா காலத்தில் புனேயில் செட்டில் ஆனதால் அந்த நாளைய தமிழ் அப்படியே இருக்கிறது.

இந்திய ஹாக்கியின் இன்றைய நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லையே?

ஓரளவு உண்மைதான். நல்ல வீரர்கள் இருக்

கிறார்கள், நல்ல பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்டியின் முடிவுகள் மட்டும் நமக்கு பாதகமாகவே இருக்கின்றன. இந்திய வீரர்களிடத்தில் போராடும் தன்மையும், தந்திர குணமும் குறைவாகவே இருக்கிறது. எழுபது நிமிடங்கள் பந்தைத் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தந்திரத்தோடும், விவேகத்தோடும் விளையா

டினால் எதிரணியினர் மிரண்டு போவார்கள். அப்போது ஹாக்கி, பார்வையாளர்களைக் கவரும் ஆட்டமாக மாறும். இது பயிற்சியாளர்களின் வேலை மட்டுமல்ல. தனிப்பட்ட வீரர்கள்தான் இதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் கிரிக்கெட்டின் உயரத்தை ஹாக்கியால் நெருங்க முடியவில்லையே?

இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஹாக்கி இன்னும் விளையாட்டாகவே இருக்கிறது. கூடவே கிரிக்கெட் போட்டிகளும் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன.

தேசிய அளவில் ஹாக்கிப் போட்டிகளின் எண்ணிக்கை குறைவு.

அதற்காக கவரேஜ்களும், மைலேஜ்களும் குறைவு. இத்தனைக்கும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னோடி பிரீமியர் ஹாக்கி லீப் போட்டிகள்தான். அதே நேரத்தில் ஹாக்கிக்கான கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சென்னையாகட்டும், பஞ்சாப் ஆகட்டும், தில்லியாகட்டும் அதற்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இதனைப் பிரபலப்படுத்தினால் ஹாக்கி மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.

யதார்த்தத்தில் நானும் சச்சின் டெண்டுல்கரும் ஒரே சமயத்தில்தான் (1989) விளையாட்டில் நுழைந்தோம். அவர் எங்கே இருக்கிறார். நான் எங்கே இருக்கிறேன். நான் நான்கு ஒலிம்பிக்கில் விளையாடியதை எண்ணி திருப்திபட்டுக் கொள்கிறேன்.

கிரிக்கெட்டில் "ஏ' டிவிஷன் ஆட்டக்காரரைக் காட்டிலும் தேசிய அணியில் ஆடும் ஹாக்கி வீரரின் வருமானம் குறைவு. முன்னைக்கு இப்போது எவ்வளவோ தேவலை. வெளிநாட்டு ஹாக்கி வீரர்களோடு ஒப்பிடுகையில் இந்திய வீரர்கள் சாமர்த்தியசாலிகள். தேசிய அணியில்   இடம் கிடைத்த கையோடு பிரபல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள். ஜெர்மனியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்கள்கூட, வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இந்தியாவில் பயிற்சிக்கான நேர அவகாசமும் அதிகம். இந்தியாவில் இருப்பதைப் போல வசதிகள் ஜெர்மனி வீரருக்கோ, ஸ்பெயின் வீரருக்கோ இருந்தால் இன்னும் கூடுதல் வெற்றிகள் பெறுவார்கள்.

மூன்று ஒலிம்பிக் போட்டிகள் விளையாடிய முன்னாள் ஹாக்கி கேப்டன் திலீப் திர்க்கியைக் காட்டிலும் நேற்று கிரிக்கெட் அணியில் சேர்ந்த யூசுப் பதானை அனைவருக்கும் அடையாளம் தெரியும். சாதாரண மக்களைவிட்டுத் தள்ளுங்கள். பல விளையாட்டுப் பத்திரிகையாளர்களுக்கே ஹாக்கி வீரர்களை அடையாளம் தெரிவதில்லை.

நீங்கள் தேசிய அணியிலிருந்த போது வெளிநாட்டுப் பயிற்சியாளர் அவசியம் என்று வாதிட்டீர்கள். தற்போது இந்தியப் பயிற்சியாளர்களே திறமைசாலிகள் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

அப்போதைய மனநிலையில் (அணியிலிருந்த காலத்தில்) வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் இருந்தால் இன்னும் கூடுதல் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியின் போது ஜெரால்டு ராச் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது கற்றுக் கொண்டதை விட குழம்பிப் போனதே அதிகம்.

அதன் பிறகு அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ரிக் சார்லஸ் வொர்த்துக்கும், ஹாக்கி நிர்வாகத்துக்கும் நிறைய பிரச்னைகள். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்விட்டது இந்தியாவின் துரதிருஷ்டம்.

அதன் விளைவு பீஜிங் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணி தேர்வு பெற முடியவில்லை. தற்போதைய பயிற்சியாளர் ஜோஸ் பிரஸ்ஸô உஷார் பேர்வழி. உடனடியாக நல்ல ரிசல்ட்டுகளை தரமுடியாது என்கின்ற நிபந்தனையுடன் பொறுப்பேற்றுள்ளார். ஐரோப்பிய அணிகளுடனான பயிற்சி ஆட்டங்களிலேயே  இந்திய அணி நிறைய கோல்கள் வாங்கி தோற்கிறது.

சமீப காலங்களில் இந்திய அணி வென்ற ஆசிய கோப்பை மாதிரியான போட்டிகளில் இந்தியர்கள்தான் பயிற்சியாளர்களாக இருந்திருக்கின்றனர். அது என்னவோ தெரியவில்லை இந்திய அணிக்குப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்ற வெளிநாட்டவர்கள் பெண்கள் அணியின் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள்தான்.

வேண்டுமானால் இந்திய பயிற்சியாளர்களை வெளிநாடுகளில் பயிற்சி பெறச் செய்து, அதன்பிறகு இந்திய வீரர்களுக்குப் பயிற்றுவிக்கலாம்.

எப்போது கல்யாணம்?

ஹாக்கியை நேசித்ததால் அது தள்ளிக் கொண்டே போய்விட்டது. பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையெல்லாம் கிடையாது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நடக்க வேண்டிய நேரத்தில் கட்டாயம் நடக்கும். ஹாக்கியை நேசித்த அளவிற்கு வேறு எதையும் என்னால் காதலிக்க முடியவில்லை.

அடிக்கடி சென்னை வருவது பற்றி..?

எனக்குப் பிடித்த இடம். 1995-ல் நஅஊ போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றோம். இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எப்போதெல்லாம் மனசு சோர்ந்து போகிறதோ அப்போதெல்லாம் அதனைப் புதுப்பித்துக் கொள்ள சென்னை வந்து விடுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.