ஹாலந்து நாட்டின் ரோன் நதி ஓடும் ஆல்ஸ் நகரின் கிராமப்புறங்களில் சூரியன் தன் ஒளிக் கதிர்களால் மஞ்சள் வண்ணமாக்கிக் கொண்டிருந்தான். எங்கும் சூரிய மஞ்சள். மஞ்சள் வண்ணம் எவ்வளவு அழகானது. சூரிய மஞ்சள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது. நீலம், சிவப்பு, பச்சை, ஊதா போன்றஎண்ணிறந்த வண்ணங்கள் இந்த சூரிய மஞ்சளில் தான் பிறக்கின்றன. சூரியன் தனது ஒளி கிரணங்களால் இள மஞ்சள் வண்ணத்தை வயல்களில் வாரி இறைத் துக் கொண்டிருந்தான். வயல் வெளியின் நடுவே விதை தெளிப்போன் ஒருவன். வானத்தின் நடுவில் தோன்றும் சூரியனை தனது தூரிகையால் சுருள் சுருளான மஞ்சள் வண்ணக் குழம்பாக வான்கோ தன் ஓவியத்தில் ஆக்கியிருந்தான். விதை தெளிப்போன் எனும் இவ்வோவியம் தான் இன்றளவும் உலகின் மிக புகழ் பெற்ற ஓவியமாகத் திகழ்கிறது.
1853ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டில் பிறந்த வான்கோ சிறு வயதிலேயே புகழ்பெற்ற ரெம்ராந்தின் ஓவியங்களை வாரக்கணக்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஓவியத்துக்குக் கருவாக எடுத்துக் கொண்ட காட்சிகள் மிக வித்தியாசமானவை.
ஒரு காட்சி. சுரங்கத் தொழிலாளர்கள் வெடிகுண்டுகளால் பாறைகளைத் தகர்க்கும் போது காயங்களால் உருக்குலைந்திருந் தனர். அவர்கள் வெறுந்தரையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கழற்றி வைத்த காலணிகள் அவர்களின் துன்பங்களின் குறியீடாகத் திகழ்ந்தது. இந்த காலணிகளை வரைந்தான் வான்கோ. உருளைக்கிழங்கு தோட்டங்களில் வேலை செய்யும் விவசாயிகள் அவித்த உருளைக்கிழங்குகளையும், தேநீரையும் ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். கும்மிருட்டில் விளக்கு ஒன்று நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒளி ஆரஞ்சு வண்ணத்தில் மினுமினுத்தது. இதைப் பார்த்த வான்கோ உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தான்.
பாôரீஸில் அப்போது பிசாரோ, ரினைர், சிசிலி, சூரா, சீசான், மொனே, மனே பொன்ற இம்பிரஷன் ஓவியர்கள் புகழ் பெற்று இருந்தனர். சூரிய ஒளியை உடனுக்குடன் ஓவியம் ஆக்க வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். சூரிய ஒளி கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டு இருப்பது. ஆரம்பத்தில் இவ்வகை ஓவியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டிய வான்கோ மாதக்கணக்கில் ஓர் ஓவியம் செய்வதற்கு காலம் எடுத்து கொள்வதாயிற்று. உடனுக்குடன் பரபரப்பாக ஓவியத்தை முடித்துவிடும் வான்காவிற்கு இவ்வகை ஓவியங்கள் பிடிக்கவில்லை.
பாரீஸýக்கு வந்த வான்கோ ஒரு சிறிய வீட்டிற்கு குடி பெயர்ந்தான். வீட்டின் வெளி புறத்திற்கு மஞ்சள் வண்ணம் அடித்து அழகுபடுத்தினான். சூரிய ஒளியில் அவ்வீடு பொன்நிறம் பெற்றிருந்தது. இவ்வகையான வண்ண அழகுள்ள வீட்டில்தான் தன்னால் சுவாசிக்க முடியும் என்றான் வான்கோ. இவ்வீட்டை மக்கள் மஞ்சள் வீடு என்றனர். வான்கோ இதனை ஒளிவீடு எனóறான். பின் நாட்களில் இவ்வீடு வான்கோவின் வீடு என்று புகழ்பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


