/

வீட்ல விசேஷங்க!

ஆவணி மாதம் பிறந்துவிட்டது. "வீட்ல விசேஷங்க' என்றபடி  நண்பர்களும் உறவினர்கள் விதவிதமான அழைப்பிதழ்களை நீட்டுகிற காலம். இன்றைக்கு அழைப்பிதழ்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதன் விற்பனையில் சிவகாசிய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 pm

ஆவணி மாதம் பிறந்துவிட்டது. "வீட்ல விசேஷங்க' என்றபடி  நண்பர்களும் உறவினர்கள் விதவிதமான அழைப்பிதழ்களை நீட்டுகிற காலம்.

இன்றைக்கு அழைப்பிதழ்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதன் விற்பனையில் சிவகாசியில் பல வருடங்கள்    அனுபவம் பெற்ற, லவ்லி ஆப்செட் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே. செல்லகுமாரிடம் பேசினோம்:

""அழைப்பிதழ்கள் எல்லாம் முதலில் மஞ்சள் மற்றும் ரோஸ் கலர் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டன. பின்னர், ஆப்செட் முறை வந்து லேமினேட் செய்யப்பட்ட அழைப்பிதழ்கள் வந்தன. இப்போதோ விதவிதமான       வகைவகையான அழைப்பிதழ்கள் நம் கண்களைப் பறிக்கின்றன.   தற்போது ஹாண்ட்-மேட், யூவி கோட்டிங், டிசைன்கார்டு என பலவிதங்களில் அழைப்பிதழ்கள் சந்தையில் குவிந்துவிட்டன. அழைப்பிதழைத் திறந்தவுடன் மேளதாளத்துடன் ஒலிக்கும் மங்கல இசை, விரலால் தடவி முகர்ந்தால், நறுமணம் வீசும் அழைப்பிதழ் என பல்வேறு புதுமைகளை காலத்திற்கேற்ற வகையில் அச்சகத்தார் புகுத்தி வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 750 புதிய ரக அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்துகிறோம். இந்தியக் கலாசாரம் மற்றும் மக்களின் ரசனைக்கேற்ப அழைப்பிதழ் தயாரிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு அழைப்பிதழ் ரூ. 350 வரை தயாரித்துக் கொடுத்துள்ளோம்.

தற்போது நடுத்தர மக்கள் யூவி கோட்டிங் அழைப்பிதழ்களை விரும்பி வாங்குகின்றனர்.

இந்தியாவில் முன்னணி ஓவியக் கலைஞர்கள் 10 பேர் உள்ளனர். அவர்களில் சிலரிடம், நமது கலாசாரத்தை வெளிக் கொணரும் விதமாக, புதிய வடிவமைப்பு கொண்ட டிசைன்களை வாங்கி அழைப்பிதழ்களைத் தயாரிக்கிறோம்.

திருமணம் என்றால், வாடிக்கையாளர்கள் ஏதாவது புதிய டிசைன் அழைப்பிதழ் வந்துள்ளதா என்றுதான் கேட்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதே எங்களது குறிக்கோள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.