புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரி உரித்த சிவன்!

மயிலாடுதுறைக்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் வழுவூரில் உள்ள சிவன் கோயிலுக்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள்? அப்படி சென்றிருந்தாலும் அக்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி எனும் அற்புத படிமச் சிலையை அதன்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:08 pm

மயிலாடுதுறைக்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் வழுவூரில் உள்ள சிவன் கோயிலுக்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள்? அப்படி சென்றிருந்தாலும் அக்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி எனும் அற்புத படிமச் சிலையை அதன் முழு வடிவ அழகுடன் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்!

தினம்தினம் நடைபெறும் அர்ச்சனைகள், பூஜைகள், பூமாலைகள் மற்றும் உடை அலங்காரங்களுடன்தான் அந்த சிலையைப் பார்த்திருக்க முடியும்.

ஆபரணங்கள், உடை அலங்காரங்கள் களைந்து அதன் அற்புதத் திருமேனியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அந் நேரத்தில் அர்ச்சகர்கள் திரையிட்டு அதன் வடிவ அழகை மக்கள் பார்த்திட முடியாமல் செய்துவிடுகின்றனர். அறநிலைய துணை ஆணையர் இந்த ஐம்பொன் திருமேனியின் பேரழகை முழுதுமாக மக்கள் கண்டு களித்து ரசிக்க உத்தரவு ஒன்றைக் கூட  பிறப்பிக்கலாம் என்று வேடிக்கையாகத் தோன்றியது. அச்சிலையை அலங்காரமின்றி தரிசிப்பது அப்படியொரு கிடைத்தற்கரிய அனுபவம்.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்படிமச் சிலையின் உருவ அமைப்பை வருணித்துக்கொண்டே செல்லலாம். தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை வாழ்த்துகின்றனர். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானைமுகமுடைய கஜமுகா அசுரனின் அட்டூழியங்கள் தாங்காமல் தேவாதிதேவர்கள் ஈஸ்வரரிடம் முறையிடுவதற்காக தவம் செய்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று யானை முகமுடைய கஜமுக அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சிதான் இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட

 யானையின் தோலையே தனது மாலை

யாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும், யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன.

யானையை வதம் செய்து ருத்ர தாண்டவம் ஆடும் இச்சிலையின் வடிவப் பேரழகை என்னவென்று சொல்வது? இடையே ஈஸ்வரனின் பாம்பு ஊர்ந்து சென்று மேலே சென்று முகம் காட்டுகின்றது. ஈஸ்வரனின் மற்றொரு கால் வளைந்து பாதத்தின் உள்ளங்காலைக் காட்டிய நிலையில் உள்ளது. இவ்வழகிய பாதத்தின் உள்ளங்காலைத் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்று நமக்கு எண்ண்த் தோன்றிவிடும். சிவனின் ரெüத்ரப்பார்வை, யானையின் உடல் உரித்து அதையே மாலையாக இடுதல், ஈஸ்வரனின் நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள், இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும், இன்னொன்று ஊன்றிய நிலையிலுமான வடிவமைப்பு போன்ற பல உருவ பேதங்களின் கோர்வமைப்பிற்கு      சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது இச்சிற்பம். 

தமிழக அரசு, மத்திய அரசின் தொல்பொருள் துறையினர் மற்றும் தமிழக அரசின் அறநிலையத் துறை             யினர், படிம வார்ப்பின் உன்னதமான இந்த கரிஉரித்தசிவன் எனும் கஜசம்ஹார மூர்த்தி சிலையினை கலாசார சொத்தாகப் பாதுகாத்து இதன் பெருமையை உலகறிய செய்ய வேண்டும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.