/

லட்​சிய' லட்​சு​மி​கள்!

பொதுவாக மக ளிர் சுய உத விக் குழு வி னர் உறுப் பி னர் க ளுக் குள் ளேயே பணத்தை வசூ லித்து, வட் டிக்கு விட்டு நிதி திரட் டு வர். சிலர் ஊறு காய் தயா ரிப்பு, சல வைத் தூள், பினா யில், கைவி னைப் பொருள் கள் எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

பொதுவாக மக ளிர் சுய உத விக் குழு வி னர் உறுப் பி னர் க ளுக் குள் ளேயே பணத்தை வசூ லித்து, வட் டிக்கு விட்டு நிதி திரட் டு வர். சிலர் ஊறு காய் தயா ரிப்பு, சல வைத் தூள், பினா யில், கைவி னைப் பொருள் கள் எனத் தயா ரித்து விற் பனை செய்து சாதனை செய் வர். தொழில் முனை வோ ராக உயர் ப வர் கள் மிகச் சிலரே. சிவ கா சி யில் அப் ப டி யான ஒரு சாத னையை நிகழ்த் தி யி ருக்கி றார் கள் ஒரு சுய உ தவி குழு வி னர்.



தண்ணீர் சுத் தி க ரிக் கும் பிளாண்ட் அமைத்து, தூய் மை யான குடி நீரை விற் பனை செய்து தொழில் முனை வோ ராக உயர்ந்து நிற் கி றார் கள் விரு து ந கர் மாவட் டம், சிவ காசி ஊராட்சி ஒன் றி யம், கிருஷ் ணா பு ரம் ஊராட் சி யில் உள்ள ரோஜா மக ளிர் மன் றத் தி னர். இது பற்றி ரோஜா மக ளிர் மன்ற நிர் வா கி க ளான எம். விஜ ய லட் சுமி, ஆர். முத் து லட் சுமி, கே.முத் து லட் சு மி யி டம் கேட் ட போது, அவர் கள் ஆர் வ மா கத் தங் க ளது அனு ப வங் க ளைப் பகிர்ந் து கொண் ட னர்.

சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் ஆலை அமைக் கும் யோசனை எவ் வாறு ஏற் பட் டது?

ரோஜா மக ளிர் மன் றம் 2001-ம் ஆண் டில் 20 உறுப் பி னர் க ளு டன் தொடங் கப் பட் டது. பின் னர், வங் கிக் கடன் பெற்று மளி கைக் கடை நடத் தி னோம். திரு ம ணம் போன்ற சுப கா ரி யங் க ளுக்குப் பாத் தி ரங் கள் வாங்கி வாட கைக்கு விட் டோம். அதில் எதிர் பார்த்த லாபம் கிடைக் க வில்லை.

வத் தி ரா யி ருப்பு உள் ளிட்ட பகு தி க ளில் தென்னை மட் டை யில் இருந்து நார் கிடைப் ப தால், அந்த நாரில் இருந்து, கயிறு உள் ளிட்ட பொருள் கள் தயா ரிக் கப் ப டு கின்றன. அதே போல, ஏதா வது மூலப் பொ ருள் க ளைக் கொண்டு தயா ரிப் பில் ஈடு பட வேண் டும் என்ற எண் ணம் எங் க ளுக்கு ஏற் பட் டது. எங் கள் கிரா மத் தில் தண் ணீர் தட் டுப் பா டின்றி கிடைக் கும். சுவை யா க வும் இருக் கும். ஆகவே, மின ரல் வாட் டர் தயா ரிக்க முடிவு செய் தோம்.



மின ரல் வாட் டர் பிளாண்ட் அமைக்க, எவ் வாறு நிதி திரட் டி னீர் கள்?

மன் றத் தில் உள்ள 20 பேரி ட மும், தலா ரூ. 10 ஆயி ரம் வாங் கி னோம். இது சேமிப் புப் பணம் தான். பாண் டி யன் கிராம வங் கி யில் ரூ. 5 லட் சம் கடன் வாங் கி னோம். ரூ. 6 லட் சத் துக் குள் பிளாண்ட் அமைத் து வி ட லாம் என எண் ணி னோம். ஆனால், சிமெண்ட் தொட்டி உள் ளிட் ட வை களை அமைக்க கூடு தல் செல வா கி விட் டது. பின் னர், தனி யா ரி டம் ரூ. 4 லட் சம் கடன் வாங் கி னோம். ரூ. 1.75 லட் சம் செல வில் பிளாண்ட்டை விரி வாக் கம் செய் தோம். மொத் தம் ரூ. 12.68 லட் சம் செல வா னது. ஒரு வ ழி யாக 2009-ம் ஆண்டு செப் டம் பர் முதல் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் பிளாண்ட் வெற் றி க ர மா கச் செயல் ப டத் தொடங் கி யது.



குடி நீரை எவ் வாறு விற் கி றீர் கள்?

கிருஷ் ணன் கோ வில் கலச லிங் கம் பல் க லைக் க ழ கத் திற்கு தின மும் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் தேவைப் ப டு வதை அறிந் தோம். பல் க லைக் க ழக நிர் வா கி களை அணு கி னோம். அவர் கள் உற் சா கத் து டன், எங் க ளி டம் மின ரல் வாட் டர் வாங் கச் சம் ம தித் த னர்.

இப் போது ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயி ரம் லிட் டர் மின ரல் வாட் டர் தயா ரித்து, பல் க லைக் க ழ கத் துக்கு அளித்து வரு கி றோம். தண் ணீ ரின் தரம் குறித்து, அவர் களே ஆய் வு செய்து விடு வ தால் எங் கள் மீது முழு நம் பிக்கை ஏற் பட் டுள் ளது. மேலும் விசே ஷங் க ளுக் கும் தண் ணீர் விற் கி றோம்.

இந்த பிளாண்ட்டை இயக் கு வது யார்?

எங் கள் குழு வில் உள்ள 20 பேரில் 14 பேர், இதனை இயக் கப் பயிற்சி பெற் றுள் ள னர். ஒவ் வொரு வார மும் கூட் டம் நடத்தி, பணி வரன் முறை செய் து கொள் கி றோம்.

அத னால், எவ் வித சிக் க லும் எழ வில்லை. தின சரி 10 மணி நேரம் குடி நீர் பிளாண்ட் இயங் கு கி றது.

உங் கள் வீட்டில் ஒத் து ழைப்பு எப் படி?

பூரண ஒத் து ழைப்பு கொடுக் கி றார் கள். வங் கிக் குச் செல் வது உள் ளிட்ட பணி க ளுக்கு உதவி வரு கி றார் கள்.

மின ரல் வாட் டர் பிளாண்ட் டுக்கு தண் ணீர் எங்கு கிடைக் கி றது?

இரு ஆழ் துளை கிணறு அமைத்து, மோட் டார் மூலம் தண் ணீர் எடுக் கி றோம். அருகே கண் மாய் இருப் ப தால் தண் ணீர்த் தட் டுப் பாடு வர வாய்ப் பில்லை.

கடனை அடைத்து விட் டீர் களா?

குடி நீர் பிளாண்ட் துவங்கி 6 மாதம் தான் ஆகி றது. தனி யா ரி டம் வாங் கிய கட னில் ரூ. 1 லட் சத்தை அடைத் து விட் டோம். வங் கிக் கட னில் ரூ. 50 ஆயி ரம் செலுத் தி விட் டோம். தனி யா ரி டம் வாங் கிய கடனை முழு மை யாக அடைக்க, வங் கிக் கடனை எதிர் பார்த் துள் ளோம்.



குடும் பத் தைக் கவ னிக்க முடி கி றதா?

திட் ட மிட்டுப் பணி பு ரி வ தால் பிரச்னை வர வில்லை. அவ சர வேலை யி ருந் தால் ஒரு வ ரது வேலையை மற் ற வர் பகிர்ந்து கொள் வோம்.



எதிர் கா லத் திட் டம்?

வேப்பங் கொட்டையி லி ருந்து எண் ணெய் உள் ளிட் டவை தயா ரித்து, வெளி நா டு க ளுக்கு அனுப்ப திட்ட அறிக்கை தயார் செய்து வரு கி றோம். அதற் கான இயந் தி ரம், மூலப் பொருள், வெளி நா டு க ளில் சந்தை வாய்ப் பு கள் குறித்த தக வல் க ளைத் திரட்டி வரு கி றோம். அத் தொழி லி லும் ஈடு பட்டு வெற்றி பெறு வோம் என நம் பிக்கை உள் ளது.

சாதிக் கத் துடிப் ப வர் க ளுக் குத் தடைக் கற் கள் படிக் கற் க ளா காதா..? என அழுத் த மா கத் தெரி வித் த னர் மக ளிர் மன்ற நிர் வா கி கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.