புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒரு பக்​கம் விஜய்..​ மறு​பக்​கம் ஐ.ஏ.எஸ்.!

படிப்பு, நடிப்பு என எதை தொட்டாலும் வெற்றி, விருது என்று திரும்புகிறார் மனிஷா. "களவாணி' படத்தில் நாயகனின் தங்கையாக நடித்தவர். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இப்போது ஹீரோயினுக்கான அந்தஸ்தைப் பெற்றிருக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:24 am

ஸ்ரீதேவி குமரேசன

டிப்பு, நடிப்பு என எதை தொட்டாலும் வெற்றி, விருது என்று திரும்புகிறார் மனிஷா. "களவாணி' படத்தில் நாயகனின் தங்கையாக நடித்தவர். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இப்போது ஹீரோயினுக்கான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். நடிப்பிலும், படிப்பிலும் சுட்டியான அவருடைய கனவெல்லாம் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதில் தானாம். இதைப்பற்றி அவரிடமே கேட்போம்.

சினிமாத்துறையைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

என் அம்மாவுக்குப் பேபி ஷாலினி என்றால் ரொம்ப பிடிக்கும். அவரை போல் என்னையும் சினிமாத் துறையில் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டு. எனக்கு 12 வயதாக இருக்கும் பொழுதே சினிமாவில் நடிக்க அழைச்சிட்டு வந்துட்டாங்க. எத்தனையோ சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கியும் வாய்ப்புகள் அமையவில்லை.

அந்த சமயத்துல நான் பள்ளியின் மூலமாக நடந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டு இளம் சாதனையாளருக்கான  தங்கப்பதக்கம் வென்றேன். அது எல்லா பத்திரிகையிலும் வெளியானது. அதன் மூலமா நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதன் பிறகு சின்னத்திரையில் நிறைய தொடர்கள், திரைப்படங்களில் நடித்தேன். எனக்கு அடையாளம் ஏற்படுத்திய வேடம் தந்தது "களவாணி' படத்தின் இயக்குனர் சற்குணம்தான். அவருக்கு என் நன்றியை தெரிவிக்க ரொம்ப கடமைபட்டிருக்கிறேன்.

இதுவரை நீங்கள் நடித்த தொடர்கள், படங்கள் குறித்து?

ஏவி.எம்.மின் "நிம்மதி', "நாணயம்', "சவாலே சமாளி', "அகல்யா', "மலர்கள்', "கெட்டிமேளம்' போன்ற தொடர்களில் நடித்திருக்கிறேன். பெரியதிரையில் "வைத்தீஸ்வரன்', "பிரிவோம் சந்திப்போம்', "தெனாவட்டு', "வஞ்சகன்', "அழகு நிலையம்' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். இதை தவிர "புதிதாய் பிறப்போம்' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். அனாதையான ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் சந்திக்கிற பிரச்னைகளை மையமாக கொண்ட கதை. அந்தக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா உள்பட பல இயக்குனர்கள், கல்வித்துறையை சேர்ந்தர்வர்கள், லயோலா கல்லூரி நிர்வாகிகள் என நிறைய பேர் போன் செய்து வாழ்த்தினார்கள்.

தற்போது நடித்து வரும் தொடர்கள், படங்கள்?

விஜய் டிவியில் "யாமிருக்க பயமேன்' தொடரில் தமயந்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து ராஜ் டிவியில் கிருஷ்ணா இயக்கத்தில் "பொற்காலம்' என்று புதியத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அதில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறேன். இதைத் தவிர "அய்யன்', கோபி இயக்கத்தில் "கருப்பர் நகரம்', வைசாலி விஜயன் புரொடக்ஷன்ல வசீகரன் இயக்கத்தில் "விடியல்', மற்றும் "காரணம்', "அசுரகுலம்', "உங்கள் கவனத்திற்கு', "தெரியாமல் உன்னை காதலிச்சுட்டேன்' போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறேன். 



அடுத்து என்ன மாதிரியான கேரக்டர்கள் நடிக்க விரும்புறீங்க?

"களவாணி' படத்தைப் பார்த்துவிட்டு நான்கு, ஐந்து படங்களின் நடிக்க வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அந்த கேரக்டர்கள் எனக்குப் பொருத்தமாக இருக்காது என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சற்குணம் இயக்குகிற படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று நிறைய ஆசையிருக்கிறது.

அது எந்தளவுக்கு நிறைவேறும் என்பது தெரியவில்லை. "களவாணி' படத்தில் ஓவியா அக்கா கேரக்டர் மாதிரி, "சச்சின்', "சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஜெனிலியா மேடம் நடித்த மாதிரி, "பூ' படம் மாதிரி எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான ஒரு கதையைத்தான் எதிர்பார்கிறேன்.



நடிப்பு, படிப்பு இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்றீங்க?

நடிப்பையும் படிப்பையும் போட்டு குழப்பிக்கொள்ளமாட்டேன். கேமிரா முன்னாடி நிற்கும் போது நடிகையாக இருப்பேன். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட் வரும் வரை சும்மா இருக்காமல் படித்துக் கொண்டேதான் இருப்பேன். இதை தவிர பாட்டு, டான்ஸ், நீச்சல் பயிற்சி எனக் கற்று வருகிறேன். நடிப்பில் நல்ல ஹீரோயின் ஆகவேண்டும், படிப்பில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். அம்பத்தூரில் இருக்கும் செயின்ட் ஜோசப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறேன். எங்கள் வகுப்பில் நான் தான் முதல் ரேங்க் பெறும் மாணவி. அதே போல் எல்லா போட்டி, பந்தயங்களிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். நிறைய நேஷனல் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன்.

நண்பர்கள் உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு என்ன சொல்லுவார்கள்?

"களவாணி' ரிலீஸின்போது பள்ளியில் தேர்வு நடந்து கொண்டு இருந்ததால் என் நண்பர்கள் எல்லோரும் தேர்வு முடிந்ததும் படத்தை பார்க்க டிக்கெட் புக் செய்திருந்தார்கள். என் வகுப்பில் மட்டுமில்லாமல் எங்கள் பள்ளியில் உள்ள அனைவருமே படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள்.

உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?

ஷாலினி, தமன்னா, த்ரிஷா, ஸ்நேகா என எல்லாருடைய நடிப்பும் எனக்குப் பிடிக்கும். குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் "அழகி' படத்தில் நடித்த நந்திதா தாஸ் ரொம்ப பிடிக்கும். அதே போல விஜய் என்றால் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும். அவரோட ஜோடியா ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கு முன்பு "போக்கிரி', "வில்லு' இரண்டு படங்களிலும் விஜய்கூட நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என் காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. அவரோட நின்னு நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். என்னையும் எடுத்துக்க சொன்னார்கள் நான் அவரோட ஹீரோயினா நடித்துவிட்டுத்தான் போட்டோ எடுத்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டேன்.

குடும்பம்?

நான் எங்கள் வீட்டுக்கு ஒரே பெண். இப்போதைக்கு என் அம்மா விஜயாதான் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்துகிட்டு வர்றாங்க. நடிப்பில் மட்டுமில்லாமல் படிப்பிலும் நான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று போராடிகிட்டு இருக்காங்க. அவங்க ஆசை எல்லாம் நான் ஐ.ஏ.எஸ். முதற்கட்ட தேர்விலேயே தேர்வாக வேண்டும் என்பதுதான். அந்தக் கனவை நினைவாக்குகிற நாள்தான் என் வாழ்கையில் சந்தோஷமான நாளாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.