தேவையானவை: அரிசி - 250 கிராம், தேங்காய் - 1, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய் - 5
செய்முறை: அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து நீரை வடிய வைத்து மாவாக்கி ஒரு மணி நேரம் ஒருவெள்ளைத் துணியில் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு கனமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறி இறக்கி வைத்து பதினைந்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கரைந்ததும் அதில் ஏலப்பொடி, தேங்காயைப் போட்டுக் கொஞ்சம் நெய்விட்டு சுருளக் கிளற வேண்டும். அப்போது பூரணம் தயாராகிவிடும். உள்ளங்கையில் எண்ணெய்த் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கி வைத்து நடுவில் ஒரு கரண்டி பூரணத்தை வைத்து மூக்குபோல மாவு வட்டத்தின் முனைகளை ஒன்றாக இணைத்து கொழுக்கட்டை வடிவத்துக்குக் கொண்டு வரவும். பின்னர் அவற்றை இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். சுவையான கொழுக்கட்டை தயார்.
எள் கொழுக்கட்டை
தேவையானவை: எள் - 250 கிராம் , வெல்லம் - 150 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கரண்டி, அரிசி - 250 கிராம், ஏலக்காய் - 5 கிராம்
செய்முறை: அரிசியைச் சுத்தம் செய்து ஊற வைத்து நீரை வடிய வைத்து மாவாக்கி ஒரு மணி நேரம் ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் மாவைக் கொட்டி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறி இறக்கி வைத்து பதினைந்து நிமிடம் மூடிவைக்க வேண்டும். எள்ளை வாணலியில் சிவக்க வறுத்து வெல்லத்தை அதில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கி அதில் எள்ளு பூரணத்தைக் கொஞ்சம் வைத்து மூடி, ஓரங்களை மடக்கி விட்டு இட்டிலித் தட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


