புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பழிவாங்குவது பிடித்திருக்கிறது!

கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய          ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:17 am

ஸ்ரீதேவி குமரேசன

கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய          ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.

என்ன, என்ன தொடர்கள் நடிச்சிகிட்டு இருக்கீங்க?

"அவர்கள்', "கிருஷ்ணா காட்டேஜ்', "தேவதை, பந்தம்', "நம்ம குடும்பம்' இந்த தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போழுது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்கள் "கண்மணி', "தங்கமான புருஷன்', "மூன்று முகம்', விஜய் டிவியில் "ரோஜாக்கூட்டம்' ஆகிய நான்கு தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கேன். மஸ்தானா மஸ்தானாவுல ஏற்கனவே கலந்துகிட்டு டைட்டில் ஜெயிச்சியிருக்கேன். மானாட மாயிலாட எம்.எம்.2 ல ஜெயிக்க முடியல. எம்.எம்.4 பைனல்ஸ் ஆடி முடிச்சிருக்கோம். அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும், யார் ஜெயிக்கப் பண்ணப் போறாங்கன்னு. ரொம்ப படப்படப்பா இருக்கு. இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு.

"கண்மணி' தொடரில் வெறிதனமா பழிவாங்க துடிக்கிறீங்களே? யாரும் திட்டலையா?

உண்மையில்  எனக்கு அந்த ரோல் ரொம்ப  பிடிச்சிருக்கு. நான் ரொம்ப  ரசித்து, கஷ்டப்பட்டு செய்கிற ரோல் அந்த திலகா கேரக்டர். இதுப் போல வித்தியாசமான  கேரக்டர் செய்யும் போதுதான் மக்கள்கிட்ட  நல்ல ரீச் கிடைக்கும். அதனாலயே நெகட்டீவ் ரோல் செய்ய எனக்கு ரொம்ப இஷ்டம். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அக்காவா வருவேன். ஒரு பிரச்னையால் பாதிக்கப்படும் தங்கைக்காகப் பழிவாங்க துடிக்கும் அக்கா கேரக்டர் அது. இந்த மாதிரி பழிவாங்குவது ரொம்ப பிடிச்சிருக்கு.

டான்ஸ் புரொகிராம்மில்  கலந்து கொண்ட  சின்னத்திரை நடிகர்கள் நிறைய பேர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாதாக சொல்கிறார்களே உண்மையா?

நான்  ஏற்கனவே இந்த மாதிரி  டான்ஸ் ஷோஸ் எல்லாம் கலந்துகிட்டதுனால எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லை. நான் ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரிச்சு செய்வதுனால என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஸ்பாட்டுக்குப் போய்ட்டா என்ன காட்சியோ அதை சரியா முடிச்சு கொடுத்திட்டு வந்திடுவேன். அங்க போய்ட்டு தூக்கமின்மை, டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதனால் ஏற்படும் வலி அதையெல்லாம் கம்மிச்சுக்க மாட்டேன்.

அதுப்போல ஷோ இருக்கிற அன்று சீரியலுக்கு தேதி தரமாட்டேன். ஒரே நேரத்துல  ரெண்டடையும் செய்ய முடியாது.

பெரியத்திரையில்  படங்கள் நடிச்சுகிட்டு  இருக்கீங்களா?

என்னோட  முதல்படம் "பெருசு' அதில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். காமராஜ் சார் டைரக்ட் செய்திருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு புரொடியூசரும் கூட. அதன்பிறகு கதம் கதம்ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். பத்மா மதன் டைரக்ட் செய்த "அம்முவாகிய நான்' என்ற படத்திலும் நடிச்சிருக்கேன்.

அதன்பிறகு தங்கர்பச்சன் சார் டைரக்ஷன்ல "பள்ளிக்கூடம்' படத்தில் நடிச்சிருக்கேன். பி.ஆர்.ஓ பாலன் டைரக்ட் பண்ணின "ராசாத்தி'ன்னு ஒரு டெலி ஃபிலிம் பண்ணியிருக்கேன். இப்போ லேட்டஸ்ட்டா பாலா சார் அஸிடெண்ட் டைரக்ட் பண்ணும் "தேரோடும் வீதியிலே' நடிச்சுகிட்டு இருக்கேன். அதற்கடுத்து பாலசூரியா சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதில் ரெண்டாவது ஹீரோயினா நடித்துக்கொண்டிருக்கேன்.  

மானாட மயிலாட, தொடர்கள், பெரியத்திரைன்னு  பிஸியா இருக்கீங்க  எப்படி நேரம் கிடைக்குது?

காலையில் 9-9 சூட்டிங் முடித்துவிட்டு அதன் பிறகு டான்ஸ்  பிராக்டீஸ்க்கு போயிடுவேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரத்தை பகிர்ந்து செய்வதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இப்படி டைட் ஷெடியூல்ல ஓர்க் பண்ணுவது எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா உட்கார்ந்தா சோம்பேறி ஆயிடுவோம்ல. அதனால எப்போழுதும் சுறுசுறுப்பா இருக்கனும் ஏதாவது வேலையை செய்துகிட்டே இருக்கணும்.  

இந்த மாதிரி கேரக்டர்  நடிக்கணும்னு  நினைத்ததுண்டா?

ஓரளவுக்கு எல்லா மாதிரி கேரக்டரும்  நடிச்சுட்டேன். நான் இதுவரை நடிக்காத கேரக்டர்ன்னா  அது பைத்தியகாரி கேரக்டர், இன்ஸ்பக்டர் கேரக்டர், ஊனமுற்றவர்கள் கேரக்டர் பண்ணதில்லை. அந்த மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கு.  

நடிப்பு தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?

நாட்டியம்னா  எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பேஸிக்கலாவே ஒரு கிளாசிக்கல் டான்ஸர். இப்பவும் பரதநாட்டியத்தில் சாதிக்கணும்ங்கிற வெறி, எண்ணம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூல் வைத்து பெரிய அளவில் வரணும்ங்கிற ஆசையும் இருக்கிறது.

உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?

டான்ஸ் மாஸ்டர் ராமன் பழனிதான் என் அப்பா. அம்மா, நான் தம்பி என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.