சா திக்க வேண்டிய பெண்களின் வாழ்க்கை ஏதோ ஒரு கட்டத்தில் சாதனைகள் செய்ய முடியாத படி முடங்கிப் போய்விடுகிறது. என்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு பேராசிரியை சொன்னது என் நினைவுக்கு வருகிறது. "கல்லூரியில் மாணவிகள் கற்க வந்ததும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தாக்கம் ஏற்படுகிறது. நன்றாகப் படிக்கின்றனர். கல்லூரிப் படிப்பு முடியும் நேரத்தில், -மேடம், எனக்கு திருமணம். மாப்பிள்ளை என்னை வேலைக்கு அனுப்பமாட்டாராம்- எனக் கூறியபடி, திருமண அழைப்பிதழை நீட்டுகின்றனர். மாணவிகளின் கனவுகள் நொறுங்கும் அந்தச் சந்தர்ப்பங்களில் எங்களுக்கு மிகுந்த சங்கடமாக இருக்கும்...''
}இப்படி பட்டாசு வெடிப்பது போல பேசுகிறார் சுபாஷினி. இவர் பி.காம். பட்டதாரி என்பதோடு சிவகாசியில் வெற்றிகரமான பட்டாசுத் தொழிலதிபரும்கூட. அதுமட்டுமின்றி நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாகவும், அரியலூர் மாவட்டம் மணகதி என்ற ஊரில் உள்ள கௌதம புத்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளராகவும் இருந்து சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து வருகிறார்.
சுபாஷினியிடம் அவரது வெற்றியின் ரகசியம் குறித்து கேட்டோம்.
பட்டாசுத் தொழிலுக்கு எப்போது வந்தீர்கள்?
எனது கணவர் ஆர்.சி.எஸ். ஜானகிராமன் துபாயில் தொழில் செய்து வருகிறார். நான், பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். எனது தந்தை எஸ். ராமசாமி பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 7 ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அப்போது, இந்தத் தொழிலை கவனிக்க வேறு யாரும் இல்லாததால், நான் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு இந்தத் தொழிலுக்கு வந்தேன்.
உங்களது பட்டாசு ஆலை எப்போது துவங்கப்பட்டது?
1998-ம் ஆண்டு சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் 22 அறைகளுடன் பட்டாசு ஆலை துவங்கப்பட்டது. தற்போது, ஆலையில் சுமார் 100 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துவக்கத்தில் 20 விதமான பட்டாசுகள் தயாரித்து வந்தோம். தற்போது, 70 ரக பட்டாசுகளைத் தயாரிக்கிறோம்.
தொழிலில் போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?
தரமான பட்டாசு, குறிப்பிட்ட நேரத்தில் சப்ளை என்பதில் கவனம் செலுத்துகிறேன்.
மேலும், யாருக்கும் கடன் கொடுப்பது கிடையாது. பணம் கொடுத்தால்தான் பட்டாசு என்ற நிலையை வைத்துள்ளோம். நியாயமான விலையில் தரமான பட்டாசு கொடுப்பதால், வியாபாரிகள் பலர் சிவகாசி வந்து வாங்கிச் செல்கின்றனர். மேலும், கமிஷன் ஏஜென்டுகள் மூலமாக ஆர்டர் எடுத்து, இந்தியா முழுவதிலும் அனுப்பி வைக்கிறோம். தரம் என்ற தாரக மந்திரத்தால் தொழிலில் போட்டியைச் சமாளிக்
கிறோம்.
பாதுகாப்பு குறித்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தி
யுள்ளீர்களா?
தொழிற்சாலை ஆய்வகத் துறையினர் ஆலைக்கு வந்து நேரடியாக பயிற்சி அளிக்கின்றனர். விதிமுறைகளைக் கடைப்பிடிக்க, நான் தொழிலாளர்களை தனித்தனியே சந்தித்து அறிவுரை கூறிவருகிறேன். மேலும், கண்காணிப்பாளர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுரை கூறியுள்ளேன். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன், இணைந்து பணிபுரிகிறார்களா எனக் கண்காணிப்பேன்.
மருந்துக் கலவை, மருந்து அடைப்பு ஆகிய வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் எனக் கண்டிப்பு காட்டிவருகிறேன். தொழிலாளர்களின் பாதுகாப்பும் ஒருவகை முதலீடுதான் என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். அவர்களின் சுக துக்கங்களில் பங்குகொள்கிறேன். எனவே, எனது தொழிலாளர்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் வேலைசெய்து வருகின்றனர். தொழிலாளர்களைக் கொண்டுதான் ஆலை இயங்குகிறது என நன்கு உணர்ந்துள்ளேன்.
இந்தத் தொழிலில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளீர்கள்?
நான் இந்த ஆலை நிர்வாகத்துக்கு வந்தபோது, வழக்கமான பட்டாசுகளான தரை சக்கரம், பூச்சட்டி, பென்சில் உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் வந்தன. மாற்றம் காலத்தின் கட்டாயம். நுகர்வோர் எதனை விரும்புகிறார்கள், வியாபாரிகள் எதனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற விவரங்களை ஏஜென்டுகள் மூலம் அறிந்து கொள்வேன். அதற்கேற்றாற் போல புதிய ரக பட்டாசுகளைத் தயாரிக்கிறேன். மேலும், மேற்பார்வையாளரின் உதவியுடன் புதிய ரக பட்டாசு குறித்து ஆய்வு செய்கிறேன். இதனால், இந்தத் தொழிலில் வெற்றி பெறமுடிந்துள்ளது. மேலும், தற்போது விண்ணில் சென்று ஒளிசிந்தும் பட்டாசுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த ரக பட்டாசுகள் இப்போது தயாரிக்கப்படுகின்றன.
மத்திய, மாநில அரசுகள் இந்தத் தொழிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?
பட்டாசு ஏற்றுமதிக்கு அரசு உதவ முன்வரவேண்டும். ஏற்றுமதிக்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பேச வேண்டும். பட்டாசு ஏற்றுமதியானால், சிவகாசியில் மேலும் தொழில்வளம் பெருக வாய்ப்புள்ளது.
இந்தத் தொழிலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல திட்டம் உள்ளதா?
தற்போது பரவலாக தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலை மாற இந்தத் தொழிலில் பல வேலைகளை இயந்திரமயமாக்க வேண்டும். எந்தெந்த வேலைகளை இயந்திரம் மூலம் செய்யலாம் என, மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் கூறவேண்டும். இயந்திரம் வடிவமைக்க அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். அப்படி வரும்பட்சத்தில், எங்கள் ஆலையிலும் சில வேலைகளுக்கு இயந்திரம் அமைப்போம்.
பட்டாசு ஆலையையும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் எப்படி கவனிக்க முடிகிறது?
இதற்கு திட்டமிடல் அவசியம். காலை 8 முதல் 10 மணி வரை பட்டாசு ஆலையில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டுப் பின்னர், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். பிற்பகல் 12 மணி வரை ஊராட்சி மன்ற வேலைகளைக் கவனிப்பேன். பட்டாசு ஆலையில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், ஊராட்சியில் மக்கள் ஒத்துழைப்பும் உள்ளதால், குளறுபடி இல்லாமல் செயல்பட்டு வருகிறேன்.
எதிர்கால திட்டம் என்ன?
இன்னும் ஒரு தொழில் துவங்குவதற்கு கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு மேலும், பல புதிய ரகங்களைத் தயாரிக்க வேண்டும்.
பெண்களுக்கு ஒரு வார்த்தை?
நீங்கள் திறமைசாலி என நினைத்தால், வீட்டில் முடங்காமல் ஏதாவது செய்யுங்கள். அந்த ஊக்கம் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். பின்னர், உலகம் உங்களைத் திரும்பிப்பார்க்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


