இளவரசி கயல்விழி!
படபடக்கும் பட்டாம் பூச்சியாய், நமது கேள்விகளை முடிக்கும் முன்னரே சட்டென்று கொஞ்சமும் தயாங்காமல் தெள்ளத் தெளிவாக பதிலளிக்கும் இவர், "இளவரசி' தொடரில் அமைதியான கயல்விழியாக வந்து ரசிகர்களின் மனதை அள்ளி செ


படபடக்கும் பட்டாம் பூச்சியாய், நமது கேள்விகளை
முடிக்கும் முன்னரே சட்டென்று கொஞ்சமும்
தயாங்காமல் தெள்ளத் தெளிவாக பதிலளிக்கும் இவர், "இளவரசி' தொடரில் அமைதியான
கயல்விழியாக வந்து ரசிகர்களின் மனதை அள்ளி செல்லும் அகிலாதான். அவருடன் ஒரு சந்திப்பு.
எப்படி சினிமாத்துறையை தேர்ந்தெடுத்தீங்க?
நான் சினிமாத்துறை தான் வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வில்லை அது தானாகவே அமைந்த ஒன்று. எனக்கு குருவாக இருந்து என்னை வழி நடத்தி செல்லும் பிரதாப் என்பவர்தான் நான் முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சேர உதவி செய்தார்.
அதன் பின் படிப்படியாக உயர்ந்து தற்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக வளரும் வரை எனக்கு பக்கபலமாக இருந்து, உதவிகள் செய்து, ஊக்குவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நானும், பிரதாப் சாரும் சேர்ந்து ஐடியா செல்லர் என்று நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறோம். இந்நிறுவனத்தின் மூலம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாடவா என் பாடலை' என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம்.
வேறு என்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறீர்கள்?
வஸந்த் டிவியில் பெண்களுக்கான ஸ்பெஷல் க்விஸ் நிகழ்ச்சி, பாலிமர் சேனலில் லைவ் ஷோ அது மட்டுமல்லாமல் ஒரு துறையில் சாதித்த சாதனையாளர்களைப் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறேன். இதைத் தவிர பெரியதிரையில் கிட்டத்தட்ட பனிரெண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
பிரபலங்களையோ, சாதனையாளர்களையோ நேர்காணல் செய்யும்போது என்ன தோன்றும்?
பிரபலங்களின் நேர்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு சாதனையாளர்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்த கொண்டு கேள்வி கேட்கும் போது என்னுடைய அறிவும், செயல் திறனும் அதிகரிக்கிறது.
ஒரு மருத்துவரையோ, அல்லது பாடகரையோ அல்லது வேறு துறையில் சாதித்தவர்களையோ, கேள்வி கேட்கும் போது அவர்களுக்கு ஏற்றவாறு என்னை தயார் செய்து கொள்ள முடிகிறது. இதனால் நமது அறிவும் தெளிவும் வளர்ச்சியடைகிறது. சாதனையாளர்களைச் சந்திக்கும் போது மனதில் ஒருவித தெம்பு பிறக்கிறது. நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.
"இளவரசி' தொடரில் கயல்விழியாக நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?
"இளவரசி'யில் பூ தொடுத்து விற்று பிழைக்கும் அம்மாவுக்கு மகளாக நடிக்கிறேன், நிஜத்தில் கயல்விழிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதற்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் நான். இந்த மாதிரி ஒரு ரோலில் நடிப்பது உண்மையிலேயே எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவம். அதே சமயத்தில் நல்ல அனுபவமும் கூட. ராடன் நிறுவனத்தின் தொடரில், ஒரு நல்ல ரோலில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மூலம் மக்களைத் தொடர்பு கொண்டு பேசும் போழுது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
நேரடி நிகழ்ச்சிகள் வழங்கும் போது அதை நாம் பார்க்கவோ கேட்கவோ முடியாது. அதே போல அடுத்து நம்மிடம் யார் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், யாரிடம் பேசப்போகிறோம், என்ன கேட்பார்கள், என்ன பதில் சொல்ல போகிறோம் என்பதே சில நேரங்களில் தெரியாமல் பேச வேண்டியிருக்கும். அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படி எதுவுமே தெரியாமல் எதிரே கேட்டபவர்கள் மனநிலையை அறிந்து அவர்களுக்குத் தகுந்த பதில் அளிப்பது என்பது ஒரு கலைதான். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் ரொம்ப த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும். நான் ரொம்ப விரும்பி வழங்கும் நிகழ்ச்சிகளில் "லைவ் ஷோ'வும் ஒன்று.
நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எது?
கலைஞர் டிவியில் காலை ஒன்பது முதல் பத்து மணிவரை ஒளிபரப்பாகும், தேனும் பாலும், ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் "தேன்கிண்ணம்', வஸந்த் டிவியில் "தேனருவி', கேப்டன் டிவியில் "நெஞ்சில் நின்றவை' போன்ற பழைய பாடல்களை ஒளிபரப்பும், நிகழ்ச்சிகளையும் மற்றபடி க்விஸ் புரொகிராம்களும்தான் விரும்பி பார்ப்பேன்.
உங்களைப் பற்றி?
நான் ஒரு மலையாள பெண். அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, இதுதான் எங்கள் இனிய குடும்பம். பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். எப்பவும் தைரியமாக இருக்கணும், எதையாவது சாதிக்கணும், எந்தத் துறையாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னைப் பொருத்தவரை சோம்பேறியாக இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க வேண்டும். இதுதான் அகிலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...