92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இசைச் சோலை

* தட்டினால் இசை எழுப்பும் இசைத் தூண்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் ஆகிவயற்றில் உள்ளன. * வயலின் என்றும் பிடில் என்றும் அழைக்கப்படும் மே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:26 pm

த.சீ.பாலு

* தட்டினால் இசை எழுப்பும் இசைத் தூண்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் ஆகிவயற்றில் உள்ளன.

* வயலின் என்றும் பிடில் என்றும் அழைக்கப்படும் மேலைநாட்டு இசைக்கருவி, பழந்தமிழ் இலக்கியத்தில் "கின்னரி' என்று குறிக்கப்பட்டுள்ளது.

* பிடிலை, நம்நாட்டு இசைக்கருவியாக மாற்றம் செய்து அமைத்துத் தந்தவர் வித்வான் வடிவேலுப்பிள்ளை. அவர் தஞ்சை அரண்மனை இசைப் புலவராக விளங்கியவர்.

* இசைத்தமிழ் பற்றிய ஓர் ஆய்வு நூல் "யாழ் நூல்'. இதனை விபுலானந்த அடிகளார் எழுதியுள்ளார். 1947-ல் கரந்தைத் தமிழ்ச்சங்கம் அதனை வெளியிட்டது. இந்த நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என ஏழு பகுதிகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான யாழ்களையும், யாழ் உறுப்புகளையும் பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.