92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்

* தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது, அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால், எரிவாயு மிச்சமாகும். * கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை நிறுத்திவிட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:26 pm

எம் . காந்திமதி கிருஷ்ணன்

* தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது, அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.

* கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.

* எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத் தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.

* காபி, டீ, பால் போன்றவற்றை வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் அருந்தலாம். முடியாத பட்சத்தில் ஃப்ளாஸ்கில் ஊற்றிவைக்கலாம். இதனால் ஒவ்வொருத்தருக்கென்று தனித்தனியாக சூடாக்குவதை தவிர்க்க முடியும். சாப்பாட்டுக்கும் இதே முறையைப் பின்பற்றலாம் அல்லது ஹாட்பேக்கில் போட்டு வைத்துவிடலாம்.

* இட்லி பாத்திரத்தில் இட்லி அவிக்கும்போது அதன் அடியில் பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவற்றை வைத்தால் அருமையாக வெந்துவிடும்.

* தோசையை இருபக்கமும் வேக வைக்காமல் ஆப்பம் மாதிரி மூடிவைத்து எடுக்கலாம். எரிவாயுவும் மிச்சமாகும், புதிய சுவையும் கிடைக்கும்.

* யாராவது வீட்டின் அழைப்பு மணியை அடித்தாலோ அல்லது தொலைபேசி அழைப்பு வந்தாலோ காஸ் அடுப்பை அணைத்துவிட்டுச் செல்லுங்கள். எரிவாயு மிச்சமாவதுடன் மறதியால் ஏற்படும் சில விபத்துகளையும் தவிர்க்கலாம்.

* வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரமாவது சமைக்காத இயற்கை உணவு, அவல், முளைகட்டிய பயறு, பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

* பருப்பு, சாதம் போன்றவற்றை குக்கரினுள் மற்றொரு பாத்திரத்தை வைத்து சமைக்காமல், குக்கரிலேயே நேரிடையாக சமைத்தால் எரிவாயு மிச்சமாகும்.

* அவ்வப்போது குடிப்பதற்கான நீரை காய்ச்சுவதை தவிர்த்து, அகலமான பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதற்கும்,தேவைப்படும் தண்ணீரை மொத்தமாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்.

* சமையல் தொடங்குவதற்கு முன் அதற்குத் தேவையான அனைத்துப்பொருள்களையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டால், எரிபொருள் விரயமாவதைத் தடுக்கலாம்.

*காய், குழம்பு வகைகளை முடிந்தவரை மூடி வைத்தே சமைக்க வேண்டும்.

* குழம்பு, கூட்டு, பொரியல் எனத் தனித்தனியாக தாளிக்காமல் அனைத்தையும் மொத்தமாக தாளிக்கலாம்.

* அடுப்பின் பர்னர்களை அவ்வப்போது நன்கு சுத்தம் செய்து எப்போதுமே நீல நிற ஜூவாலை எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.