தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொஞ்சம் பாட்டு கொஞ்சம் பேச்சு!

 சமீபத்தில் ராகசுதா அரங்கில், மியூசிக் சர்க்கிள் சார்பில், வித்யா சுப்பிரமணியன் என்ற கர்நாடக இசைப்பாடகி நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். இவர் லால்குடி ஜெயராமனின் மாணவி! எல்லா கலைஞர்களையும் போல வித்யா, சும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:54 pm

சாருகேசி

 சமீபத்தில் ராகசுதா அரங்கில், மியூசிக் சர்க்கிள் சார்பில், வித்யா சுப்பிரமணியன் என்ற கர்நாடக இசைப்பாடகி நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். இவர் லால்குடி ஜெயராமனின் மாணவி! எல்லா கலைஞர்களையும் போல வித்யா, சும்மா பாட்டை மட்டும் பாடிவிட்டுப் போயிருந்தால், இந்தப் பேட்டியை நீங்கள் படிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. சில பாடல்களுக்கு முன்பும், சில பாடல்களுக்குப் பின்பும் பாடல்கள் குறித்த முக்கியமான தகவல்களை ரசிகர்களிடம் "பளிச் பளிச்' என்று பகிர்ந்துகொண்டார்.

 ஏதோ அபூர்வமான ராகத்தில் அமைந்த பாடல் என்றால் சில கலைஞர்கள், போனால் போகட்டும் என்று ராகத்தின் பெயரை மட்டும் அறிவிப்பார்கள். வித்யா சுப்பிரமணியன் வித்தியாசமான பாடகி.

 முதல் வித்தியாசமே நம்மைக் கொஞ்சம் அசத்துகிறது. சார்ட்டர்டு அக்கவுன்டன்சி தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாவது இடம் மற்றும் தங்கப்பதக்கம் பரிசு.

 அமெரிக்க பாஸ்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம். பத்து வருடங்கள் அமெரிக்க வாழ்க்கை. அங்கே நியூயார்க் ஸ்டேட் கவுன்சிலிலிருந்தும், சரடோகா ஆர்ட்ஸிலிருந்தும் கர்நாடக இசை கற்பிக்கவும், பரப்பவும் டாலர்களில் உதவித்தொகை.... ஆனால் இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் புகழ் பெற்ற குரு லால்குடி ஜெயராமனிடம் கற்ற கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவுக்கே சென்ற ஆண்டு திரும்பிவிட்டார் வித்யா.

 வித்யாவைப் பொறுத்தவரை குட்பை - டு- அமெரிக்கா என்றாலும் குட் - டு - இண்டியா என்பதால், வித்யாவின் இசையை ரசிக்கலாம். இடையிடையே அவர் "பளிச் பளிச்'சென்று தரும் சிறுசிறு தகவல்களையும் நொறுக்ஸôகச் சுவைக்கலாம். ""கர்நாடக இசை, இளைய தலைமுறையின் கரங்களில் பத்திரமாகவே இருக்கிறது..'' என்று ஒரு மூத்த தலைமுறை இசைக்கலைஞர் கூறியிருந்தார். அதை இணைய வழியில் இசை பரப்பி மெய்ப்பித்துவரும் வித்யாவிடம் பேசியதிலிருந்து...

 பாடுவதோடு நீங்கள் தரும் தகவல்களைக் கேட்பதற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறதா?

 பாடல்களுக்கான சுவையான பின்னணி இருக்கும் பட்சத்தில் அதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உதாரணத்துக்கு, "குருகுஹாய பக்தானுக்ரஹாய' என்ற முத்துசாமி தீட்சிதரின் பாடலைப் பாடிய பின், "இது சாமா ராகத்தில் அமைந்தது. குருகுஹ விபக்தி கிருதிகளில் நான்காவது. தீட்சிதருக்கு அத்வைதத்தில் இருந்த நம்பிக்கையை இது காண்பிக்கிறது. பாடலின் சரணத்திலேயே ராகத்தின் பெயரான சாமா, சாமரஸ்ய சம்ப்ரதாயகாய என்று வருவதைக் கவனியுங்கள். இது திருத்தணி திருத்தலத்தைப் பற்றிய பாடல்' என்பேன்.

 "உன்னைத் துதிக்க அருள் தா' பாடலைப் பாடியதும், இதுதான் பாபநாசம் சிவன் எழுதிய முதல் பாடல். திருவாரூர் தேர் சமயம், 1917ல் எழுதப்பட்ட பாடல்... என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னேன். இதைப் போன்ற தகவல்கள், அந்தக் குறிப்பிட்ட பாடலைக் குறித்து ரசிகர்களின் கவனிப்பை இன்னமும் அதிகப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

 சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டக்குறிஞ்சியில்தான் பதவர்ணமே பாடினீர்கள்... மறுபடி ஏன் அதிலேயே ராகம் தானம் பல்லவி பாடினீர்கள்?

 நான் எந்தப் பாரம்பரியத்தையும் உடைக்கவில்லை. முந்தைய நாளில் வர்ணம் எந்த ராகத்தில் பாடப்பட்டதோ, அந்த ராகத்தில்தான் ராகம்-தானம்-பல்லவி பாடுவார்கள். அதைத்தான் நான் பின்பற்றினேன்.

 இந்தியாவுக்கு வந்ததும் உங்களின் இசை குறித்த செயல்பாடுகளை எப்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்?

 சென்ற ஆண்டு கணவருடன் இந்தியா திரும்பியதும், முழு நேர கர்நாடக இசைப் பாடகி மற்றும் இசை கற்பிக்கும் ஆசிரியையாகப் பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகிவிட்டேன். பல நகரங்களில் பல சபாக்களில் கச்சேரிகள் செய்வது மட்டுமல்லாது, "ஸ்கைப்' என்னும் சமூக வலைத் தளத்தின் மூலமாக உலகம் முழுக்க கர்நாடக இசையைப் பரப்பிவருகிறேன்.

 என்னுடன் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று பல நாடுகளில் இருந்தும் ஆன்லைனில் இசை கற்பவர்களும், கற்பிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இதில் பல வகைக் கலாசாரப் பின்னணி கொண்டவர்கள் இருக்கின்றார்கள்.

 இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளி ஆப்பிரிக்கர்கள், இந்திய ஆன்மிகத்தில் ஆர்வமுள்ள ஏராளமான அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். நான் பயிற்சி மட்டுமல்லாது, தரக் கட்டுப்பாடு எனும் விஷயத்திலும் அவர்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகளில்

 ஈடுபடுகிறேன்.

 நமது பாரம்பரிய கற்பிக்கும் முறைக்கேற்ற மென்பொருளைத் தயாரித்திருக்கிறேன். இசை, நிதி நிர்வாகம் - இரண்டுமே கடுமையான உழைப்பை அடிப்படையாகக் கொண்டவை. எனக்கு நியூயார்க் ஸ்டேட் ஃபவுண்டேஷன் பார் த பைன் ஆர்ட்ஸ், சாரடோகா ஆர்ட்ஸ் கவுன்சில் ஆகியவை உதவித்தொகை அளித்தன. நூலகங்களிலும், டவுன் ஹால்களிலும் இந்தியர்கள், இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு இசை வகுப்புகள் நடத்தினேன். இவை இலவச வகுப்புகள்.

 சென்ற வருடம் கர்நாடக இசையை ரசிப்பது எப்படி என்று ஒரு டிவிடி தயாரித்து வெளியிட்டேன். அடுத்த மாதம் பெங்களூர் இன்டர்நேஷனல் சென்டரிலும், ஒயிட்-பீல்டிலும் இசையை ரசிக்க செயல்-விளக்கச் சொற்பொழிவுகள் நடத்தவிருக்கிறேன்.

 இந்த மாதம் சென்னையிலேயே ஹெச்.சி.எல். மற்றும் சார்சூர் இசை நிகழ்ச்சிகள் என்று இசையால் முழுமையாக வசமாகியிருக்கிறேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.