92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உள்ளாடை தூய்மை

* உள்ளாடைகள் தன் மிருதுத்தன்மையை இழந்து, சொரசொரப்பாக மாறும்வரை சிலர் உபயோகிக்கின்றனர். உள்ளேதானே போடுகிறோம். கிழிந்திருந்தாலோ, சாயம் போனதாக இருந்தாலோ யார் பார்க்கப் போகிறார்கள் என அலட்சியம் செய்யாமல்,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:38 pm

எம் . காந்திமதி கிருஷ்ணன்

* உள்ளாடைகள் தன் மிருதுத்தன்மையை இழந்து, சொரசொரப்பாக மாறும்வரை சிலர் உபயோகிக்கின்றனர். உள்ளேதானே போடுகிறோம். கிழிந்திருந்தாலோ, சாயம் போனதாக இருந்தாலோ யார் பார்க்கப் போகிறார்கள் என அலட்சியம் செய்யாமல், குறிப்பிட்ட மாத இடைவெளியில் உள்ளாடைகளைப் புதிதாக மாற்றிவிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

* நமக்கு ஏற்ற அளவிலான உள்ளாடைகளில் கவனம் தேவை. சாதாரணமான நிலையில் மட்டுமல்லாது, உட்காரும்போதும், உள்ளாடைகள் சற்று தளர்வாகத்தான் இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான எலாஸ்டிக் தோலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* இப்போது விதவிதமான கலர் மற்றும் சின்தடிக் வகை உள்ளாடைகள் ஏராளம் கிடைக்கின்றன. ஆனால்

அவற்றை உபயோகிக்கும்போது கவனம் தேவை. உள்ளாடைகள் காட்டன் துணியிலானதாகவும், மிருதுவானதாகவும் இருப்பது நல்லது.

* உள்ளாடைகளை சற்று வெயில்படும்படி உலர்த்துவது நல்லது. உள்ளாடைகளை எப்போதும் நன்கு உலர்ந்த பிறகே அணிய வேண்டும். சற்று ஈரமான நிலையில் அணிந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்படும்.

* உள்ளாடைகளை வாஷிங்மெஷினில் துவைப்பவர்கள், மெஷினில் இருந்து எடுத்த பிறகு, குறைந்தது மூன்று முறையாவது சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும்.

* அதிக சோப் பொடியில் ஊற வைத்து துவைக்கும்போது ஐந்து அல்லது ஆறு முறை நன்கு அலச வேண்டும்.

* சூடான தண்ணீரில் குறைந்த அளவு சோப் பொடி போட்டு, பத்து நிமிடங்கள் ஊற வைத்து, துவைத்து, நன்கு அலசுவதே சிறந்தது.

* பெண்கள் உள்பாவாடைகளைத் துவைக்கும்போது உள்பக்கமாக மாற்றி எடுத்து நன்கு பிரஷ் செய்து அலச வேண்டும். ஆண்களின் உள்பனியனுக்கும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.

* வெளியூர், சுற்றுலா செல்லும்போது கழிவறையில் உபயோகிப்பதற்கு வைத்திருக்கும் தண்ணீர் முற்றிலும் பாதுகாப்பானதுதானா என உறுதி செய்துவிட்டு உபயோகித்தால், பல சிக்கல்களிலிருந்தும் தப்பித்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.