லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல்: புளி அவல் உப்புமா

 தேவையானவை:கெட்டியான அவல்- 300 கிராம்  புளி- சிறு உருண்டை அளவு  வற்றல்- 3  பச்சை மிளகாய்- 4  கடுகு- 1 தேக்கரண்டி  கடலைப்பருப்பு- 2 தே.க.  உளுத்தம் பருப்பு- 2 தே.க.  கடுகு- 1 தே.க.  மஞ்சள்பொடி- சிறிதளவ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:24 pm

 தேவையானவை: கெட்டியான அவல்- 300 கிராம்

 புளி- சிறு உருண்டை அளவு

 வற்றல்- 3

 பச்சை மிளகாய்- 4

 கடுகு- 1 தேக்கரண்டி

 கடலைப்பருப்பு- 2 தே.க.

 உளுத்தம் பருப்பு- 2 தே.க.

 கடுகு- 1 தே.க.

 மஞ்சள்பொடி- சிறிதளவு

 வெல்லம்- ஓர் உருண்டை

 எண்ணெய்- தேவையான அளவு

 உப்பு-தேவையான அளவு

 செய்முறை: புளியைத் தண்ணீர்விட்டு அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் புளியுடன் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அவலை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் கரைத்த புளித்தண்ணீரை விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் மஞ்சள்பொடி சேர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வற்றல், பச்சைமிளகாய் போட்டு தாளித்து அவலைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.