

தேவையானவை: பச்சரிசி- 500 கிராம், உளுத்தம் பருப்பு-200 கிராம், புழுங்கல் அரிசி-100கிராம், கடலைமாவு-100கிராம், வேர்க்கடலை- 100 கிராம், எள்- 100 கிராம், நெய்-100 கிராம், எண்ணெய்-250 கிராம், மிளகாய்த்தூள்- சிறிதளவு, உப்பு-தேவையான அளவு
செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து உலர்த்தி மாவாக ஆக்கி சலித்து வாணலியில் போட்டு வறுக்கவும். உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் நீரை வடிகட்டியெடுத்த அரிசியை வறுக்கவும். புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக இடித்து மாவாக்க வேண்டும். கடலைமாவையும் தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசிமாவுடன் இந்த மூன்று மாவையும் கலந்து நெய்,எள், பொடி செய்யப்பட்ட வேர்க்கடலை, உப்பு, சிறிது மிளகாய்ப்பொடி ஆகியவற்றை மாவுடன் சேர்த்துக் கிளற வேண்டும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கெட்டியான மாவாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஒரு வாழை இழையில் வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொரித்து எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.